11 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால் போதும். நினைத்தது நிச்சயமாக நிறைவேறும்.

vilakku-pray

உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவனிடம் நாம் எந்த வரங்களைக் கேட்டாலும், அது நிச்சயம் நிறைவேறும். அதே சமயம் நாம் இறைவனிடம் கேட்க கூடிய அந்த வரம் நம்முடைய தகுதிக்கு ஏற்றதா, என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் நடுத்தர வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு, நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்ற வரத்தை எல்லாம் இறைவனிடம் கேட்க கூடாது. இது நம் தகுதிக்கு தகுந்தது கிடையாது என்பது நாம் அறிந்த ஒரு விஷயம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் இன்றைக்கு பிச்சைக்காரனாக இருப்பவன் கூட, நாளை கோடீஸ்வரன் ஆக மாற முடியும். அதே அதிர்ஷ்டம் ஒருவரை விட்டு தூரம் சென்று விட்டால், இன்றைக்கு கோடிஸ்வரர் ஆக இருப்பவர்கள் நாளைக்கு தெருக் கோடிக்கு வரும் சூழ்நிலையும் ஏற்படும்.

deepam

இருப்பவர்கள், இல்லாதவர்களைப் பார்த்து எப்போதுமே ஏளனமாக பேசாதீர்கள். சரி, வேண்டிய வேண்டுதலை உடனே நிறைவேற்றிக் கொள்ள, எந்த கடவுளை நினைத்து நம்முடைய வீட்டில் எந்த தீபத்தை ஏற்றி வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள். வெற்றிலை1, மண் அகல் விளக்கு, நல்லெண்ணெய், விளக்கேற்ற திரி, பசு சாணம் அல்லது பசு சாணத்தால் செய்யப்பட்ட வரட்டி. இந்தப் பதினோரு நாளும் நீங்கள் வீட்டில் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். கட்டாயமாக அசைவம் சாப்பிடக்கூடாது.

sanam

பூஜை அறையில் தினம்தோறும் இறைவனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். காலை 6 மணிக்கு இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய தொடங்க வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று கொஞ்சமாக மஞ்சளை எடுத்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மஞ்சள் பிள்ளையாரை வெற்றிலையின் மேல் பிடித்து வைக்க வேண்டும். இந்தப் பிள்ளையாருக்கு அருகம்புல் அல்லது பூவை வைத்து அலங்காரம் செய்து விடவேண்டும். பிள்ளையாருக்கு அருகிலேயே இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். உங்களுக்கு பசு சாணம் கிடைத்தால், அந்த பசும் சாணத்தை தரையில் தட்டையாக வைத்து அதன் மேலே மண் அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு விநாயகருக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

manjal-pillaiyar2

பசுஞ்சாணம் கிடைக்காதவர்கள் வரட்டியின் மேல் அகல் விளக்கை வைத்து, நீங்கள் பிடித்து வைத்திருக்கும் விநாயகருக்கும் முன்பு தீபம் ஏற்றி உங்களுடைய வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் சொல்ல வேண்டும். பூஜை அறையில் தரையிலேயே நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தரையில் ஒரு மரப்பலகை போட்டு அமர்ந்து கொண்டு நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீப ஒளிச் சுடரை பார்த்து, பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரை பார்த்து உங்களுடைய கஷ்டங்களைச் சொல்லி வேண்டுதலை வையுங்கள். 11 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

praying-god1

பதினோரு நாட்களும் புதியதாக வெற்றிலையையும் மஞ்சள் பிள்ளையாரை மாற்ற வேண்டும். பழைய வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றி விட வேண்டும். பசுஞ்சாணம் என்றால் அந்த பசுஞ்சாணத்தை தினம்தோறும் மாற்ற வேண்டும். காய்ந்த வரட்டுகடி என்றால் தினம்தோறும் அதே வரட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்து பாருங்கள். நிறைவேறாத வேண்டுதல் கூட 11 நாட்களில் நிறைவேறும்.