பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா கொடுத்த தெளிவான விளக்கம் இதோ உங்களுக்காக.

kani-periyava
- Advertisement -

ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்துள்ளார்கள். யாரோ ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். உன்னுடைய கஷ்டம் தீர வேண்டும் என்றால் நீ மகா பெரியவா அவர்களை ஒரு முறை மடத்திற்கு சென்று பார் என்று. அந்த பெரியவரின் சொல்லை ஏற்று இந்த இரண்டு பேரும் அதாவது கணவனும் மனைவியும் மஹா பெரியவா மடத்திற்கு வந்து விட்டார்கள்.

இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் உள்ளே வந்து, சேர்த்துதான் அமர்ந்திருந்தார்கள். மடத்தின் வெளியே மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.

- Advertisement -

அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து இருக்கையில் அமரச் சொன்னார். ‘உன்னுடைய மகன் பித்து பிடித்தது போல இருப்பதற்கு  உன்னுடைய கணவன் வழி சொந்த பந்தங்கள் காரணம் கிடையாது. உன்னுடைய கணவரையோ உன் கணவரின் சொந்த பந்தங்களையும் நீ திட்டிக்கொண்டே சாபம் கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம், உன்னுடைய மகனுக்கு நிச்சயமாக உடல்நிலை சரியாகப் போவது கிடையாது. அடுத்தவர்களை எப்போதும் தூற்றிக் கொண்டே நிந்திப்பவர்களை அந்த அம்பாள் கூட நிச்சயம் மன்னிக்க மாட்டாள். உன் மகனுக்கு தானாக சரியாகிவிடும்’. என்றபடி அந்தப் பெண்மணியை பார்த்தவாறு மகா பெரியவா சொன்னதும், அந்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம் நாம் எதுவுமே சொல்லவில்லையே, நம் மனதிற்குள் இருப்பதை இந்த மகா பெரியவா அப்படியே சொல்கிறாரே என்று நினைத்து பிரமித்து போய்விட்டாள்.

கஷ்டமும் நஷ்டமும் அடுத்தவர்களால் நமக்கு வருவது கிடையாது. நாம் செய்த கர்ம வினையின் மூலமாகத்தான் நமக்கு நன்மைகளும் தீமைகளும் வருகின்றது. சில பேருக்கு பிறந்ததிலிருந்தே நன்மை நடக்கும். சில பேருக்கு சில காலம் கழித்து நன்மை நடக்கும். சில பேருக்கு கடைசி வரை நன்மை நடக்காமலேயே போய்விடும். அது அவரவருடைய கர்ம வினையால் நிர்ணயிக்கப்படுகின்றது. நீ தினமும் ஸ்லோகங்கள் சொல்லுவதும், சுவாமிக்கு பூஜை செய்வதும் பெருமைக்காக அல்ல. அது உன்னுடைய கொடுப்பினை. தினமும் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்து வாசலில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி வைப்பது மங்களகரத்திற்காக மட்டும்தான். இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு மனதில் அழுக்கோடு இருந்தால் உன்னுடைய கஷ்டங்கள் தீரப் போவது கிடையாது, என்ற படியும் அந்த பெண்மணிக்கு புரியும் படி சில விஷயங்களை சொல்லி முடித்தார் மகா பெரியவா.

- Advertisement -

பிறகு இந்தப் பெண்மணியை வெளியில் அமரச் செய்துவிட்டு கணவரை மட்டும் உள்ளே வர சொன்னார். கணவர் வந்து மகா பெரியவா அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி க்கொண்டு, மஹாபெரியாவா முன்பு அமர்ந்து கொண்டார். 10 நிமிடங்கள் அமைதியாக நேரம் கழிந்தது. பிறகு வெளியில் அமர்ந்திருக்கும் மனைவியையும் உள்ளே அழைத்தார். கணவன் மனைவியும் சேர்ந்து மகா பெரியவாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். நீங்கள் இருவரும் இப்போது வீட்டிற்கு செல்லுங்கள். ஒரு மண்டலம் கழித்து, உங்களுடைய பிள்ளையோடு திரும்பவும் என்னை மகிழ்ச்சியோடு வந்து சந்திப்பீர்கள் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.

என்ன ஆச்சரியம் 48 நாட்கள் கழித்து கணவன் மனைவி மனநிலை சரியில்லாத அந்த பிள்ளை, மூவரும் வந்து மகா பெரியவாவிடம் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி விட்டது என்று சொல்லி ஆசீர்வாதம் பெற்றனர்.

- Advertisement -

கணவன் மனைவி தம்பதியர்கள் ஆக வந்தார்கள் அல்லவா. அவர்களுடைய பிள்ளை பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்திருக்கின்றான். பிறகு படித்தான். பிறகு நல்ல வேலைக்கும் சென்றான். ஆனால் வேலைக்கு சென்ற சில நாட்களில் அவனை அறியாமலேயே சில மாற்றங்கள் அவனுடைய உடம்பில் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது அவனுக்கு பித்து பிடித்தது போல சுபாவம் வந்துவிட்டது. யாருடைய துணையும் இல்லாமல் அவனால் வாழ முடியவில்லை. சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லப் போனால் அவன் பைத்தியமாக மாறிவிட்டான். எவ்வளவோ மருத்துவரை போய் பார்த்தும் அவனை குணப்படுத்த முடியாமல் இறுதியாக பெற்றவர்கள், பிரச்சனைக்கு தீர்வு காண மகா பெரியவா அவர்களை தேடி வந்தார்கள்.

இப்போது தீர்வும் கிடைத்துவிட்டது. இறுதியாக மகா பெரியவா அந்த தம்பதியரை பார்த்து சொன்னது இதுதான். நமக்கு வரக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம் அடுத்தவர்கள் கிடையாது. நாம் செய்த கர்ம வினை தான் நம் பிள்ளைகளை போய் சேர்கிறது. ஆகவே, கஷ்டம் என்று வந்தவுடன் அந்த கஷ்டத்தை வைத்து அடுத்தவர்களை நாம் எப்போதும் நிந்திக்க கூடாது. (உங்களுக்கு புரிகிறதா. அந்த பெண்மணி தன்னுடைய மகனுக்கு வந்த மன நோய்க்கு காரணம், கணவன் வழி சொந்த பந்தங்கள் தான். கணவன் வழி சொந்த பந்தத்தில் இருப்பவர்கள் எல்லாம் பித்து பிடித்தவர்கள் என்பதும், அந்த சுபாவம் தான் தன் மகனுக்கு ஒட்டிக்கொண்டது என்பது மனைவியின் கற்பனை. அதனால் தான் கணவரின் மீதும் அவளுடைய கோபத்தை திருப்பினால். அது தவறு என்பதை மகா பெரியவா அந்த பெண்மணிக்கு சரியான நேரத்தில் புரிய வைத்ததன் காரணமாக அந்த பெண்மணி, தன்நிலை மறந்து செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொண்டால்).

ஆக பெற்றவர்கள் செய்யக்கூடிய பாவமானது பிள்ளைகளை பாதிக்கும். பிரச்சனையே வந்தாலும் நீங்க அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க. உங்கள் பிரச்சனைக்கு நீங்கள் செய்த கர்ம வினை தான் காரணம் என்று, பிரச்சனைக்கு உண்டான தீர்வினை தேடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல வழி கிடைக்கும். என்ற கருத்தோடு மகா பெரியவா அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்று இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -