மணக்க மணக்க சவுத் இந்தியன் ஸ்டைல் வேர்க்கடலை சட்னி! வித்தியாசமான சுவையில் இப்படி ஒருமுறை ஈசியாக செஞ்சு பாருங்க 10 இட்லி கூட சலிக்காம சாப்பிடலாம்.

verkadalai-peanut-chutney1_tamil
- Advertisement -

வேர்க்கடலை சட்னி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் இந்த மாதிரியான டிஃபரென்ட் ஸ்டைலில் இருக்கக்கூடிய இந்த வேர்க்கடலை சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு இட்லியை கூடுதலாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் சவுத் இந்தியன் ஸ்டைலில் அசத்தலான ஒரு சுவையில் வேர்க்கடலை சட்னி எப்படி செய்ய போகிறோம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 150 கிராம், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பல் – மூன்று, வரமிளகாய் – நான்கு, பெருங்காயத்தூள் – ரெண்டு சிட்டிகை, புளி – ஒரு இன்ச், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
வேர்க்கடலை சட்னி செய்வதற்கு முதலில் 150 கிராம் அளவிற்கு வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு வாணலியில் போட்டு சூடு பறக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தோல் உரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. உரிக்க வேண்டும் என்றால் உங்கள் விருப்பம் நீங்கள் உரித்துக் கொள்ளலாம். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து பாதி அளவிற்கு வறுபட்டு வரும் பொழுது பூண்டு பற்கள் மற்றும் தோல் உரித்து பொடியாக நறுக்கிய வெங்காய துண்டுகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம், பூண்டினுடைய பச்சை வாசம் போக சிறிது நேரம் வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் பொழுது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நான்கு வர மிளகாய்களையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். ஒரு இன்ச் அளவிற்கு புளியை கொஞ்சமாக சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் அரை ஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும். மிளகாயின் பச்சை வாசம் போக எண்ணெயிலேயே அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மணக்க மணக்க உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தெரியுமா உங்களுக்கு? இதோ ரெசிபி. தயிர் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ்.

எல்லா பொருளும் நன்கு வதங்கியதும் அதை அப்படியே அடுப்பை அணைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலைகளை சேர்க்க வேண்டும். பின்னர் இந்த பொருட்களையும் உடன் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை, ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு நன்கு தாளித்து கொட்டுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சூப்பராக டேஸ்டியாக இருக்கக்கூடிய இந்த வேர்க்கடலை சட்னி ரெசிபியை இதே மாதிரி நீங்களும் செய்து அசத்துங்க!

- Advertisement -