மனதில் இருக்கும் கோழைத்தனம் நீங்கி, எதையும் துணிவோடு எதிர் கொள்ளும் மனதைரியத்தை பெற, எல்லா பெண்களும் கட்டாயம் செய்யவேண்டிய தீப வழிபாடு!

amman

பொதுவாகவே சில பெண்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பார்கள். எந்த பிரச்சனை வந்தாலும் துணிவோடு எதிர்கொண்டு அந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சில பெண்களுக்கு எதை தொட்டாலும் பயம் இருக்கும். கோழைத்தனமாக இருப்பார்கள். இது பெண்களுக்கு மட்டும் தானா? இல்லை, சில ஆண்களும் இந்த வரிசையில் அடங்குவார்கள். மன பயத்தை கொண்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் யார் வேண்டுமென்றாலும் இந்த தீப வழிபாட்டினை மேற்கொண்டு நல்ல பலனை பெற முடியும். தேவையற்ற மன பயத்தை நீக்கக் கூடிய ‘சக்தி தீப வழிபாட்டை’ நம் வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dhurgai-Amman

பெண்கள் எல்லோருமே சக்தி தேவியின் சொரூபம் தான். அந்த அம்பாளின் சொரூபம் கொண்ட பெண்கள், அவரவர் வீட்டில் இந்த வழிபாட்டை செய்வது உத்தமமான பலனைக் கொடுக்கும். பூஜை என்றாலே எப்போதும் போல அவரவர் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமியின் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தீபத்திற்கு பெயரே சக்தி தீபம் என்பதால், சக்தி தேவியின் கையில் இருக்கும் சூலாயுதம் முக்கியம். பச்சரிசி மாவில் பூஜை அறையில் இரண்டு சூலாயுதங்களை வரைந்து கொள்ள வேண்டும். இதற்கு நடுவே ஒரு குங்குமப் பொட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 2 சூலாயுதத்தின் மேல் இரண்டு மண் அகல் தீபங்களை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்ய வேண்டும்.

sulam

இந்த சூலாயுதத்தின் மீது தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால், இயற்கையாகவே பெண்கள் தைரியசாலியாக மாறிவிடுவார்கள். பெண்கள் மனதில் ஒரு தன்னம்பிக்கை சேர்ந்த துணிச்சல் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைத்துவிடும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களும் குழந்தைகளும் மன பயத்தோடு துணிச்சல் இல்லாமல் இருந்தால் அவர்களுக்காகவும் இந்த தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் பெண்கள் கையால் சூலாயுதத்தை வரைந்து பெண்கள்தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அவர்களை பூஜையில் அமரச் செய்து அம்பாளை பிரார்த்தனை செய்து கொள்ளும்படி சொல்லுங்கள்.

இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதால், வீட்டில் கண் திருஷ்டியின் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் இருந்தாலும் அது சரியாகிவிடும். சில பேருக்கு இரவில் நன்றாக தூக்கம் வராது. கெட்ட கனவுகள் வந்து அச்சுறுத்தும். அப்படிப்பட்டவர்கள் இந்த தீப வழிபாட்டை செய்து அம்பாளை வேண்டிக்கொள்ளலாம் நிச்சயமாக நல்ல பலன் உண்டு.

குறிப்பிட்ட நாட்கள் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தொடர்ந்து உங்களால் எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் இந்த பூஜையை செய்யலாம். இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியேறி விட்டால், நிச்சயமாக வீட்டிற்கு நல்ல காலம் தான். இந்த சக்தி தீபத்தை வீட்டில் ஏற்றி அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து, எல்லோரும் அந்த அம்பாளின் அருளை முழுமையாகப் பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.