கடையில் வாங்கிய அரிசி மாவில் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்ய விருப்பம் இல்லையா? வீட்டில் இருக்கும் பச்சரிசியில் மிருதுவான பிள்ளையார்பட்டி மோதகம் சுலபமாக எப்படி செய்வது? இதோ உங்களுக்கான ஈஸி ரெசிபி.

mothagam
- Advertisement -

சில பேர் கடையில் வாங்கிய பச்சரிசி மாவு, கொழுக்கட்டை மாவில் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்வார்கள். சில பேருக்கு இப்படி கடையில் அரைத்த மாவில் வாங்கி கொழுக்கட்டை செய்ய வராது. அப்படியே செய்தாலும் அந்த கொழுக்கட்டை ரொம்பவும் கல்லு போல இருப்பதாக நினைப்பார்கள். வீட்டில் இருக்கும் பச்சரிசியை வைத்து மிருதுவான பிள்ளையார்பட்டி கொழுக்கட்டையை சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றிய ஒரு சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செய்து பிள்ளையாருக்கு படைத்துப் பாருங்கள். மனதும் திருப்தியாக இருக்கும் இதை சாப்பிட்டவர்களுடைய வயிறும் திருப்தியாகும்.

செய்முறை 

இதற்கு நமக்கு முதலில் 1 கப் அளவு பச்சரிசி தேவை. எந்த கப்பில் பச்சரிசியை அளந்திகளோ, அதே கப்பில் 1/2 கப் அளவு பாசிப்பருப்பையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கப்பில் 1 1/2 கப் அளவு வெல்லம் தேவை அதையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு இரண்டு மூன்று முறை கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 10 லிருந்து 15 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எடுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை போட்டு நன்றாக வறுக்கவும். அது சிவந்து பொன்னிறம் வரட்டும். அதுவரை காத்திருங்கள். கைவிடாமல் கலந்து கொண்டே இருங்கள். பருப்பு சிவந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, இந்த பருப்பை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைக்கவும்.

இதற்குள் பச்சரிசி 15 நிமிடங்கள் நன்றாக ஊறி இருக்கும். அதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக வடிகட்டி விடவும். பிறகு ஒரு வெள்ளை துணியில் தண்ணீர் வடித்த பச்சரிசியை பரப்பி போட்டு ஃபேன் காற்றிடையே 15 நிமிடம் ஆரவைத்து விடுங்கள். பச்சரிசியில் இருக்கும் அந்த தண்ணீர் எல்லாம் நீங்கினால் போதும். பச்சரிசி முழுமையாக காய வேண்டும் என்ற அவசியம் இல்லை. லேசான ஈரத்தன்மையோடு இருக்கும் இந்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு சின்ன நைசான ரவை பதம் அளவிற்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அதே மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பையும், போட்டு கொரகொரப்பாக அரைத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி, அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை, போட்டு அரிசி அளந்த டம்ளரில் 3 டம்ளர் அளவு தண்ணீரை இதில் ஊற்றி கலந்து குக்கரை மூடி விசில் போடவும்.

மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இதனுடைய பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பார்க்கவும். அரிசியும் பருப்பும் பக்குவமாக வெந்திருக்கும். அப்போது அதில் ஏலக்காய் தூள் சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு, வெவ்லம் 1 1/2 கப் அளவு போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து நன்றாக கலந்தால் வெல்லம் மாவோடு சேர்ந்து கரைந்து நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

வெல்லம் சேர்த்தவுடன் மாவு தண்ணீராகுபடி நமக்கு தோன்றும். பயப்படாதீங்க. கலந்து கொண்டே இருந்தால் மாவு கட்டி பிடிக்கும். அப்பவும் மாவு கொஞ்சம் தளதளவென பக்குவத்தில் இருக்கிறது உருண்டை பிடிக்க முடியாது என்றால் இதில் கொஞ்சம் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் நன்றாக கரைந்த உடன், இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பச்சை பயரை வைத்து இப்படி ஒரு முறை வடை செய்து பாருங்கள். ஆரோக்கியமான, சுவையான வடையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்.

மாவு கட்டியான பிறகு இதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும். சில பேர் இதில் நெய்யில் கடலைப்பருப்பு முந்திரிப் பருப்பு கூட வறுத்து சேர்த்துக் கொள்வார்கள். அது உங்களுடைய விருப்பம் தான். இப்போது நமக்கு மாவு தயாராக இருக்கிறது. இது நன்றாக ஆறிய பின்பு கையில் நெய் அல்லது எண்ணெய் தடவி உருண்டைகளாக பிடிக்கலாம். அல்லது பிடி கொழுக்கட்டையாக பிடிக்கலாம். அல்லது மவுல்டில் போட்டு மோதகம் போல செய்தும் இட்லி பானையில் ஆவியில் 10 நிமிடங்கள் போல வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான். சுவையான சூப்பரான மோதக கொழுக்கட்டை தயார். இந்த வித்தியாசமான கொழுக்கட்டை ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா, இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -