மூன்று தலைமுறைக்கு பாட்டி ஆனாலும், மூட்டு வலியே வராது. வேர்க்கடலை சட்னியை இப்படி அரைத்து சாப்பிடுங்கள்.

verkadalai chutney
- Advertisement -

வேர்க்கடலை சட்னி சாப்பிட்டால் மூட்டு வலி வராமல் இருக்குமா. மூட்டு வலி வரும். ஆனால் வேர்கடலை சட்னியோடு பிரண்டை சேர்த்து அரைத்து சாப்பிடுங்க. மூட்டு வலி வராது. இது பிரண்டை சட்னி என்று சொன்னால் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள். பிரண்டையை வேர்க்கடலையோடு கலந்து, இது வேர்க்கடலை சட்னி என்று சொல்லிக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள். சுவைக்கு எந்த குறைவும் இருக்காது. சுவையான பிரண்டை வேர்க்கடலை சட்னி அரைப்பது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் தேவையான அளவு பிரண்டையை எடுத்து, அதில் இருக்கும் நார் எல்லாம் சீவி கொஞ்சம் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (1/4 கப் அளவு வேர்க்கடலைக்கு, 1 கைப்பிடி அளவு பிரண்டை சரியாக இருக்கும்.)

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, வேர்க்கடலை 1/4 கப், வரமிளகாய் 5, வரமல்லி 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், வெள்ளை எள்ளு 1 ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் மணக்க மணக்க வறுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் வறுபட்டு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அந்த பொடி இருக்கட்டும்.

அடுத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய பிரண்டை 1 கைப்பிடி, தோலுரித்த பூண்டு பல் 4, சிறிய நெல்லிக்காய் அளவு புளி போட்டு, நன்றாக வதக்க வேண்டும். பிரண்டை நன்றாக நல்லெண்ணெயில் வதங்கி வாசம் வரும். அது வரைக்கும் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து இது நன்றாக ஆறினதும், ஏற்கனவே பொடி அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா மிக்சியில்.

- Advertisement -

அதோடு இந்த பிரண்டை வதக்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விழுது போல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இப்போது சட்னி தயார்.

இந்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். எப்பவும் போல எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவாப்பிலை,  வரமிளகாய், பெருங்காயம், தாளித்து சட்னியில் கொட்டி கலந்தால் சூப்பரான பிரண்டை வேர்க்கடலை சட்னி தயார். இது வெறும் வேர்க்கடலை சட்னி தான் என்று பொய் சொல்லி குழந்தைகளுக்கு கொடுத்து விடுங்கள். எல்லோரும் சாப்பிட்டு விடுவார்கள். உடம்புக்கு அவ்வளவு சத்து. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஒரு சூப்பரான சைடிஷ்.

- Advertisement -