தப்பி தவறி கூட இந்த 4 பொருட்களை யார் கையில் இருந்தும் வாங்காதீங்க. துரதிஷ்டம் உங்கள் கையோடு ஒட்டிக் கொள்ளும்.

mahalashmi2
- Advertisement -

அந்த காலத்தில் சொல்லி வைத்த சில நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றையும் இன்று நாம் மறந்து வருகின்றோம்.  பெரியவர்கள் தவறு என்று சொல்லக்கூடிய சில விஷயங்களை, இன்றைய இளைய தலை முறைகள் ஏற்றுக் கொள்வதே கிடையாது. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்லி ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். ஆனால் முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு சொல்லி வைக்கவில்லை.

அந்த வரிசையில் நாம் எந்தெந்த பொருட்களை அடுத்தவர்களிடமிருந்து வாங்கக்கூடாது, எந்தெந்த பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்து மறந்திருக்கும். அதை நினைவு கூற ஒரு வாய்ப்பு.

- Advertisement -

பிறர் கையில் இருந்து நாம் வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன:
பிறர் கையில் இருந்து நாம் கசப்பு நிறைந்த பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு பொருட்களை வாங்கக்கூடாது. இதே போல இந்த பொருட்களை எல்லாம் நாம் யாருக்கும் நம் கையால் கொடுக்கவும் கூடாது. ஆயுதங்களை ஒருவர் கையில் இருந்து இன்னொருவர் கைக்கு மாற்றக்கூடாது. அப்படி கொடுப்பதாக இருந்தால் கூட அந்த பொருளை கீழே வைத்து விட வேண்டும். தேவை என்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு கூர்மையான கத்தி, அருவாமனை, கோடாரி கடபாரை போன்ற எல்லா பொருட்களையும் கையோடு கை மாற்றாதீங்க. கீழே வைத்து விடுங்கள். தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

கசப்பு நிறைந்த பொருட்கள் என்றால் உதாரணத்திற்கு பாவக்காய், சுண்டக்காய், இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் இருக்கிறது அல்லவா. அதை எல்லாம் நீங்கள் வாங்கி உங்கள் சொந்த பந்தங்களுக்கு கொடுக்காதீங்க. உதாரணத்திற்கு அம்மா வீட்டில் இருந்து தன்னுடைய பெண் குழந்தைக்கு இப்படிப்பட்ட பொருட்களை கொடுக்கக்கூடாது. அம்மா வீட்டில் இருந்து பெண்கள் இப்படிப்பட்ட பொருட்களை எடுத்து வரவும் கூடாது.

- Advertisement -

தாய் வீட்டில் இருந்து இரும்பு பொருட்களை கொண்டு வரவே கூடாது. உதாரணத்திற்கு உங்கள் பெண்ணுக்கு சீர்வரிசை வாங்கிக் கொள்கிறீர்கள். திருமணத்திற்கு அல்லது புது வீடு கட்டி குடி போவதற்கும். பித்தளை ஜாமான்கள் வாங்கி கொடுக்கலாம். தங்கமாக சில பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம்‌. வெள்ளி பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். இரும்பினால் செய்யப்பட்ட சமையலறையில் புழங்கும் பாத்திரங்களை வாங்கி கொடுக்க கூடாது. தோசைக்கல், கடாய், கத்தி இப்படிப்பட்ட பொருட்களை கூட சமைப்பதற்கு சீதனமாக இரும்பில் கொடுக்கவே கூடாது.

இப்போது காலம் மாறிவிட்டது. பெண் குழந்தையை கட்டிக் கொடுக்கும் போது, இரும்பு பீரோ, இரும்பு கட்டில், சோஃபா செட் இப்படி இரும்பு சம்பந்தப்பட்ட ஜாமான்களை சீர்வரிசையாக கொடுக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் இது வழக்கத்தில் இல்லை. பித்தளை சாமான்களும், வெள்ளியும், தங்கமும், செம்பு இவைகள் தான் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. இரும்பு என்பது ஒரு சில நாட்களில் துருப்பிடித்து அழிந்து போகக்கூடிய பொருள். அதை திரும்பவும் பயன்படுத்த முடியாது. அப்படித்தான் நம்முடைய உறவும் மாறிவிடும் என்பதற்காக கூட இதை அவர்கள் சொல்லி இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: இன்றைய சிவராத்திரியில் இரவு 12 மிளகு மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள் கர்ம வினைகள் அனைத்தும் தூள் தூளாகி விடும். கர்ம வினைகள் தீர இந்த ராத்திரியை விட்டால் வேறு ஒரு எளிய வழி கிடையாது.

அப்படி இல்லை என்றால் இரும்பு சனி பகவானுக்கு உரிய பொருள் என்பதால் இரும்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு நம் கையால் கொடுக்கக் கூடாது என்றும் சொல்லி இருக்கலாம். இப்படி எத்தனை காரணங்கள் இருந்தாலும் அது நம்முடைய நன்மைக்கு தானே சொல்லப்பட்டுள்ளது. அடுத்து உப்பு. நாம் எல்லோருக்கும் தெரியும். உப்பை கையில் கொடுக்கக் கூடாது. கையில் வாங்க கூடவே கூடாது. ஆகவே, இது எல்லாம் தவறு என்று தெரிந்த பின்பு நீங்கள் அதை செய்யாமல் இருப்பது நல்லது. ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -