பசுமாட்டுக்கு உங்க கையால் இதை கொடுத்தால் பித்ரு தோஷம் உடனே விலகும்.

pasu
- Advertisement -

குடும்பத்தில் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வருகிறது. சுபகாரிய தடை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்வாய் பிரச்சினை, பிள்ளைகளுக்கு ரொம்ப நாளா வரன் தேடியும் நல்ல இடமாக அமையாமல், கல்யாணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷமோ, பித்ரு சாபமோ இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

இதை நீங்கள் உங்களுடைய ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தை கொண்டுபோய் காண்பித்தாலே அவர் உங்களுக்கு பித்ரு தோஷம் பித்ரு சாபம் இருக்கிறதா என்பதை சரியாக கவனித்து விடுவார். குறிப்பாக குடும்ப தலைவரது ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடர்களிடம் காண்பிக்க வேண்டும். சில குடும்பங்களில் சில பேருக்கு பெண் சாபம் இருக்கும்.

- Advertisement -

பெண் சாபம் இருந்தாலும் மேல் சொன்ன பிரச்சனைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க, சில பேர் என்ன செய்வார்கள் தெரியுமா. அமாவாசைக்கு திதி தர்ப்பணம் கொடுக்க மறந்து விடுவார்கள். சில பேர் வருடம் தோறும் தாய் தந்தையருக்கு கொடுக்க வேண்டிய சிரார்த்தங்களை செய்யாமல் தவற விட்டு விடுவார்கள். அது சூழ்நிலை காரணமாகவும் தவறலாம்.

அப்படி இல்லை என்றால் அவர்களுடைய இறந்த திதியை மறந்து விட்டு தெவசம் போன்ற காரியங்கள் செய்யாமல் மறந்து விடலாம். எப்படி இருந்தாலும் சரி, இப்படி முன்னோர்களை மறந்ததற்காக உங்களுக்கு பித்ரு தோஷம், பித்ரு சாபம் உண்டாக நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தவறு செய்து விட்டோம். மன்னிப்பும் கேட்டு விட்டோம். இந்த தோஷத்தில் இருந்து சாபத்திலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது.

- Advertisement -

பித்ரு தோஷம் விலக பசு பரிகாரம்

பச்சரிசி சாதம் வடித்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து விடுங்கள். பாசிப்பருப்பை வேக வைக்க வேண்டாம். இரண்டு முந்திரி பருப்பு, இரண்டு உலர் திராட்சை, சிறிதளவு வெல்லம், எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த பச்சரிசி சாதத்தில் ஊறவைத்த பாசிப்பருப்பு முந்திரிப்பருப்பு உலர் திராட்சை வெல்லம் போட்டு உங்கள் கைகளாயிலேயே பிசைந்து இதை கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

அமாவாசைக்கு திதி கொடுக்க முடியாத சூழ்நிலை, அமாவாசை வழிபாட்டை தவற விட்டீர்கள் என்றால், ஐந்து வெள்ளிக்கிழமை பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த தயார் செய்த பச்சரிசி உருண்டைகளை கொடுக்க வேண்டும். வருடம் தோறும் வரக்கூடிய திதி அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க மறந்து இருந்தால், மாதம் தோறும் அவர்கள் இறந்த திதி வரும் அல்லவா, அந்த நாளன்று இந்த பச்சரிசி உருண்டையை பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் யார் வேண்டுமென்றாலும் இந்த பச்சரிசி சாத உருண்டையை கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்கலாம். யார் கையால் கொடுத்தாலும் தவறில்லை. பெண் சாபம் இருக்கிறதா ஒன்பது வாரம் வெள்ளிக்கிழமை இதே போல பச்சரிசி சாதத்தை தயார் செய்து மேல் சொன்ன பொருட்களை எல்லாம் கலந்து கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்காத உயரத்தை தொட நரசிம்மரை இப்படி வழிபாடு செய்யுங்கள்

இதை மட்டும், யாருக்கு பெண் சாபம் இருக்கிறதோ அவர்களுடைய கையால் செய்தால் தான் பெண் சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும். இதை தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் சுபகாரிய தடைகள் எல்லாம் விலகி படிப்படியாக நல்லது நடக்க தொடங்கிவிடும்.

- Advertisement -