பிரியாணி மாஸ்டர் சொன்ன ரகசிய குறிப்பு இது. வீட்டில் ஹோட்டல் டேஸ்டில் குஸ்கா செய்ய ரகசியமான இந்த 2 பொருளை சேத்துக்கோங்க. இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

kushka_tamil
- Advertisement -

வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில், அதே குஸ்காவாசத்தில், அதே குஸ்கா ருசியின் கிடைக்கும். வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

1/2 அரிசிக்கு பின் சொல்லக்கூடிய பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கும். 1/2 கிலோ அரிசியை டம்ளரில் அளந்து கொள்ளுங்கள். எத்தனை டம்ளர் அரிசி வருகிறது. அதற்கு ஏற்றது போல தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். இந்த குஸ்காவை உங்கள் விருப்பம் போல சாப்பாட்டு அரிசி, சீரக சம்பா அரிசி, பாசுமதி அரிசி, பச்சரிசியில் கூட செய்யலாம். (அரிசியை 20 நிமிடம் போல தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.)

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய பொடியான இஞ்சி – 1 கைப்பிடி அளவு, தோல் உரித்த பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4 லிருந்து 5, சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 1 சின்ன துண்டு, லவங்கம் – 2, கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, புதினா – 1 கைப்பிடி அளவு, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். இது பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் பிரியாணியில் பச்சை நிறம் வராது. பயப்படாம செய்யுங்க.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 3 டேபிள்ஸ்பூன் – எண்ணெய், 3 – டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, பிரியாணி இலை – 2, பட்டை – 2 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, கல்பாசி சின்ன – 1 சின்ன துண்டு, போட்டு தாளிக்க வேண்டும். இதில் நீலவாக்கில் நைசாக வெட்டிய வெங்காயம் – 3 போட்டு, வதக்க வேண்டும். வெங்காயத்தில் உப்பு போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி வர வேண்டும். வெங்காயம் வதங்கி சிவப்பு நிறத்திற்கு போறதுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு, இந்த வெங்காயத்தில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். விழுதுடைய பச்சை வாடை முழுமையாக நீங்கும் அளவிற்கு வதக்குங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வதக்குங்கள்.

- Advertisement -

லேசாக அடி பிடிப்பது போல இருக்கும். இருந்தாலும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கைவிடாமல் கலந்து விடுங்கள். பச்சை நிறம் முழுமையாக போக வேண்டும். விழுது பச்சை வாடை போன பிறகு, இதில் பிரியாணி மசாலா பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் ஊற்றாதீங்க. மூன்று தக்காளிப் பழங்களை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு ஓட்டு ஓட்டி இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். மிகப்படியாக சாப் செய்தும் தக்காளியை போட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

தக்காளி பழத்தை குக்கரில் இருக்கும் விழுதோடு, சேர்க்கும் போது கொஞ்சமாக தண்ணீர் விட்டு நமக்கு கிடைக்கும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இந்த தக்காளியின் பச்சை வாடை போகும் அளவுக்கு நன்றாக கலந்து விடுங்கள். சூப்பரான பிரியாணி மசாலா நமக்கு குக்கரில் தயாராகும். வாசமே அப்படி கிடைக்கும்.

- Advertisement -

தக்காளியின் பச்சை வாடை நீங்கிய பின்பு, தயிர் – 4 ஸ்பூன் ஊற்றி, ஒரு முறை கலந்து விட்டு அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். 3 கப் அரிசி இருந்தால், 6 கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசியாக இருந்தால் அதற்கு தகுந்தது போல தண்ணீரின் அளவை குறைவாக ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். பிரியாணிக்கு தேவையான அளவு உப்பை போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் உப்பு காரம் சரிபார்த்துக் கொண்டு, எலுமிச்ச பழச்சாறு – 1/2 ஸ்பூன், இதில் விட்டு நன்றாக கலந்து அரிசியை போட வேண்டும்.

அரிசியை போட்ட பின்பும் அரிசி தளதளவென நான்கு முறை கொதித்து வந்த பிறகு, குக்கரை மூடி உங்கள் அரிசி வேகும் அளவிற்கு விசில் வைத்துக் கொள்ள வேண்டும். (உங்க வீட்டு அரிசியை பொறுத்து விசில் வைக்க வேண்டும். எப்படி வேகம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.) அவ்வளவுதாங்க. மணக்க மணக்க சூப்பரான குஸ்கா தயார். இது அச்சு அசல் ஹோட்டலில் வாங்கிய குஸ்கா போலவே இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

பின்குறிப்பு: கடை பிரியாணியில் கல்பாசி போடுவாங்க. அதேசமயம் அதில் புதினா கொத்தமல்லியை எல்லாம் நாம் எடுத்து தனியாக ஒதுக்கி வைக்க வேண்டிய வேலை இருக்காது. அரைத்து ஊத்தும் போதுதான் அந்த கலரும் அந்த சுவையும் நமக்கு கிடைக்குது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -