பொங்கல் பலக்காய் குழம்பு செய்முறை

palakkai kuzhambhu
- Advertisement -

பொங்கலன்று செய்யக் கூடிய உணவு என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது சர்க்கரை பொங்கல் அடுத்ததாக பொங்கலுக்கு வைத்து படைக்கும் காய்களை கொண்டு செய்யப்படும் இந்த நாட்டு காய்கறி குழம்பு. முன்பெல்லாம் பலரும் சூரிய பொங்கல் வைப்பார்கள். அந்த நேரத்தில் இந்த காய்கறிகளை குழம்பாகவோ அல்லது சூரியனுக்கு படைத்த பிறகு குழம்பாகவோ செய்வார்கள்.

இன்றைய நகர்புற வாழ்க்கையில் அப்படி சூரிய பொங்கல் வைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனாலும் பொங்கல் பண்டிகையின் போது இந்த குழம்பை அனைவரும் சமைக்கத் தான் செய்கிறார்கள். அப்படி செய்யக் கூடிய இந்த குழம்பை நம்முடைய பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

நாட்டு காய்கறிகள் – 1 கப் (இதற்கு கத்திரிக்காய் முருங்கைக்காய், அவரைக்காய், மொச்சைபயிறு, சக்கரைவள்ளி கிழங்கு, பிடிக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற அனைத்து நாட்டு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
பூண்டு – 10 பல்,
கருவேப்பிலை -1 கொத்து,
புளி – எலுமிச்சை பழ அளவு,
மிளகாய் தூள் -1 ஸ்பூன்,
தனியா தூள் -1 ஸ்பூன்,
குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
கடுகு – 1/2 ஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 1டீஸ்பூன்,
வெல்லம் -1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 1 கைப்பிடி.

செய்முறை

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் புளியையும் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். வெங்காயம் பூண்டு இரண்டையும் தோல் உரித்து வைத்து விடுங்கள தக்காளியை பொடியாக நறுக்கி விடுங்கள்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்து விடலாம். இதற்கு அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து விடுங்கள். மண்சட்டி இல்லாதவர்கள் வீட்டில் பயன்படுத்தும் பேனை உபயோகப்படுத்துங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெந்தயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்த பிறகு பெருங்காயத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.

அதன் பிறகு சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து குழைய வதக்கி விடுங்கள். இதை நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு மிளகாய்த்தூளுக்கு பதிலாக சாம்பார் பொடியும் சேர்க்கலாம் நன்றாக இருக்கும்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு மிளகாய்த் தூளின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு உப்பு சேர்த்து காய்கள் வேகும் அளவு தண்ணீரை ஊற்றி தட்டு போட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும். இந்த காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு கரைத்து வைத்து புளித்தண்ணீரை ஊற்றுங்கள். இந்த காய்கள் வேகம் முன்னர் புளி தண்ணீர் ஊற்றாதீர்கள் காய் வேகாது.

இதையும் படிக்கலாமே: பாரம்பரியமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்முறை

இவையெல்லாம் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை குழம்பு நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு கடைசியாக இறக்கும் பொழுது வெல்லம் சேர்த்து கொதி வரும் வரை காத்திருந்து அதன் பிறகு கொட்டும் மல்லி தழை போட்டு இறக்கி விடுங்கள். பொங்கல் பலாக்காய் குழம்பு தயார் உங்கள் குழம்பில் மணம் பக்கத்து தெரு வரை வீசும் அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -