பூஜை அறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க

poojai-room
- Advertisement -

பொதுவாகவே பூஜை அறையில் வாசம் நிறைந்த பூக்களை வைத்தால், வாசம் இருக்கும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றும் போது நல்ல வாசம் நமக்கு கிடைக்கும். ஆனால் 24 மணி நேரமும் இந்த வாசம் இருக்குமா, என்று கேட்டால் கிடையாது. காலை மாலை இரு வேளைகளில் மட்டும் இந்த வாசம் நமக்கு இருக்கும்.

பூக்கள் கொஞ்சம் வாடிவிட்டால் அதனுடைய வாசம் குறைந்து போகும். தினசரி சில பேரால் புது பூ வாங்கி சாமிக்கு போட முடியாத சூழ்நிலை இருக்கும். அந்த சமயத்திலும் பூஜை அறையில் நல்ல வாசம் மணக்க மணக்க இருக்க என்ன செய்யலாம். சின்ன சின்ன எளிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

24 மணி நேரமும் பூஜை அறை வாசமாக இருக்க

முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் சந்தன பொடி 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், ஜவ்வாது 1/4 ஸ்பூன், போட்டு இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டுக்கோங்க. இதை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி கலந்து பூஜை படங்களுக்கு பொட்டு வைத்தால் இந்த வாசம் அப்படியே நிறைவாக இருக்கும்.

இதே மஞ்சளில் பூஜை ஜாமான்களுக்கும் பொட்டு வைத்து விடுங்கள். இதில் இருக்கும் வாசம் அவ்வளவு எளிதில் போகாது. எப்போதும் இந்த ஜவ்வாது வாசனை பூஜை அறையில் இருக்கும். பன்னீர் வாசமும் வீசும்.

- Advertisement -

பெரும்பாலும் இப்போது நாம் பூஜை அறையில் சுவாமிக்கு சாமந்திப்பூ வைக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். சாமந்திப்பூ வாசம் நிறைந்த பூவா, பூஜைக்கு வைக்கலாமா என்பது இப்போது பிரச்சனை அல்ல. ஆனால் சாமந்திப் பூவிலிருந்து அத்தனை வாசனை வெளிவராது. மல்லி பூ, முல்லை பூ, ஜாதி மல்லியில், இருந்து வரக்கூடிய வாசனை இந்த சாமந்தி பூவில் இருக்காது.

ஒரு சின்ன அகலமான தட்டில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த பன்னீரில் ஒவ்வொரு சாமந்தியையும் தொட்டு தொட்டு எடுங்கள். அந்தப் பன்னீர், அந்த சாமந்திப் பூவில் ஒட்டிக்கொள்ளும். அந்த பன்னீரின் வாசனை சாமந்தி பூவிலும் வர தொடங்கும். இப்போது இந்த பூவை எல்லா சுவாமி படங்களுக்கும் வையுங்கள். வாசனை சூப்பரா இருக்கும்.

அடுத்து பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் விசேஷ நாட்கள் என்றால் பச்சரிசியை அரைத்து மாக்கோலம் போடுவோம் அல்லவா. அந்த பச்சரிசியை அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் ஊத்திக்கோங்க. கொஞ்சமாக பன்னீர் ஊற்றி, அரைங்க. இப்போது இந்த அரிசி மாவில் கோலம் போடுங்க.

கோலம் போட்ட இடங்களில் எல்லாம் பன்னீர் வாசனை இறை சக்தியை நமக்கு உணர்த்தும். அவ்வளவு நறுமணமாக இருக்கும். வீடு தெய்வ கடாட்சத்தோடு மாறும். இது எல்லாமே சின்ன சின்ன குறிப்புகள் தான். செலவு குறைந்த குறிப்புகள் தான். தேவை என்பவர்கள் பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம் உங்களுடைய வீட்டிலும் மகாலட்சுமி குடி கொள்வாள் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -