வீட்டில் பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக ஏதாவது நைவேத்தியம் செய்யணுமா? நைவேத்தியம் செய்வதின் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன?

vinayagar-vilakku-naivedhyam-prasadam
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, நைவேத்தியம் படைத்து தண்ணீர் அல்லது தீர்த்தம் தயாரித்து பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி! இவ்வாறு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எவ்விதமான பிரச்சனைகளும் நெருங்குவது இல்லை. சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படியான இந்த பூஜையில் நைவேத்தியம் படைத்து தான் பூஜை செய்ய வேண்டுமா? அதன் பின்னணியில் இருக்கும் தாத்பர்யம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு முறை பூஜை செய்யும் பொழுதும் கண்டிப்பாக நைவேத்தியம் படைக்க வேண்டும். அதே போல தண்ணீரும் வைக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் பூஜையை துவங்க கூடாது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய இடமாக பூஜை அறை இருந்தால் தான் அங்கு இறைவன் இருக்கிறார் என்று அர்த்தம் ஆகிறது. இதில் நிலம், காற்று, ஆகாயம் அனைத்தும் இயல்பாகவே பூஜை அறையில் உண்டு. விளக்கு ஏற்றுவதன் மூலம் நெருப்பும், தீர்த்தம் வைப்பதன் மூலம் நீரும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.

- Advertisement -

இந்த உலகில் ஏதாவது ஒன்று பணம் இல்லாமல் கிடைக்குமா? அன்பு ஒன்றைத் தவிர எல்லாவற்றையும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கிறது. கடவுளின் அருளை கூட பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்கிற சூழ்நிலையை மனிதனே உருவாக்கி விட்டான். கடவுள் எதற்கும் அருள் கொடுப்பதில்லை, உண்மையான பக்தியை தவிர! என்பது தான் நிதர்சனமான உண்மை. உண்மையான பக்தியுடன் நீங்கள் கொடுக்கும் சிறு பிரசாதமும், மிகப் பெரிய வரங்களை கொடுக்கக் கூடியதாக அமைந்து விடும்.

பல புராணங்களிலும், ஆன்மீக கதைகளிலும் ஏழை, எளியவர்கள் கொடுக்கும் சிறு சிறு உணவு பதார்த்தங்களில் கூட இறைவன் மிகப் பெரிய வரங்களை கொடுத்ததாகவும், தரிசனம் அளித்து மகிழ்வித்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது பஞ்சபூதங்களும் இடம் பெற்றதுடன் மட்டும் அல்லாமல், இறைவனுக்கு நீங்கள் மனமாற, மனம் உவந்து உங்களால் முடிந்த சிறு நைவேத்தியம் தயார் செய்து படைக்க வேண்டும்.

- Advertisement -

எதுவுமே இல்லை என்றாலும் கற்கண்டு, உலர் திராட்சை, பேரீட்சை போன்ற இனிப்பு பொருட்களையாவது வைத்து வழிபட வேண்டும் என்பது நியதி. பிரசாதம் வைக்காமல் வழிபடும் பூஜை நிறைவு பெறுவது இல்லை. பக்தர்களின் அருளை கடவுள் கேட்க இதென்ன லஞ்சமா? என்று கிடையாது. அன்போடு நாம் கொடுக்கும் ஒரு பருக்கை கூட இறைவனை திருப்தி படுத்தி விடும். இறைவன் மீது நாம் செலுத்தும் ஒரு வகையான அன்பு தான் இதுவும். பண்டிகை விசேஷங்களில் சர்க்கரை பொங்கல், கலவை சாதங்கள் செய்வதும் இதற்காகத் தான் இவற்றை தான்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்தியும், கண் திருஷ்டியும் நம்மை விட்டு விலக, கெட்ட சக்திகள் நம் உடம்பில் ஊடுருவாமல் இருக்க, தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்.

நைவேத்தியம் படைக்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் இல்லை ஆனால் நாம் உண்மையிலேயே அன்புடன் பக்தியுடன் கொடுக்கும் இந்த நைவேத்திய பொருளை இறைவன் ஏற்று அருள் கொடுக்கிறார் என்பது நம்பிக்கை. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் காட்டும் இந்த எளிய அன்பிற்கு இறைவன் மயங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் நைவேத்தியம் படைத்து வழிபடுவது மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. இனியும் தவறாமல் உங்களால் முடிந்தவற்றை பூஜை செய்யும் போது நைவேத்தியம் படைத்து பின்னர் பூஜையை துவங்குங்கள், நன்மைகள் பெருகும்.

- Advertisement -