இந்தப் பூண்டு குழம்புடன் சுட சுட சாதம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்க, அடடடா! நாவை விட்டு மறையாத அளவிற்கு மிகவும் அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும்

poondu
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழம்பை செய்வது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் செய்யும் குழம்பு அனைத்துமே ஒரே விதமான சுவையில் இருப்பதில்லை. சாம்பார், கீரை, கார குழம்பு, குருமா குழம்பு என பல குழம்புகளும் பலவிதமான சுவைகளில் இருக்கின்றன. எப்பொழுதும் புளி சேர்த்து செய்யும் குழம்புகள் சற்று அதிகமான சுவையில் தான் இருக்கும். அதிலும் கத்தரிக்காய், முருங்கைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு குழம்பு, இவை அனைத்தும் மிகவும் சுவையாக இருக்கும். இவற்றைவிட தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து செய்யும் இந்த பூண்டு குழம்பு அனைத்து குழம்புகளையும் விட அசத்தலான சுவையில் இருக்கும். அதை சாப்பாட்டுடன் பிசைந்து சாப்பிடும் போது நாவில் எச்சில் ஒழுகும் அளவிற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த பூண்டு குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் முலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 20 பல்,  சின்ன வெங்காயம் – 10, நாட்டுத் தக்காளி – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெந்தயம் – அரை டீஸ்பூன், வெல்லத்தூள் – 1 ஸ்பூன், நல்லெண்ணெய் – 6 ஸ்ப், உப்பு – 1 ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சம் கெட்டியான புளிக்கரைசலாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானது எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 20 பல் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

இவற்றில் மிளகாய்த்தூள் வாசனை சென்றதும் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -