இட்லி, தோசைக்கு சட்னி செய்ய தேங்காய் அதிகம் சேர்க்காமல், பொட்டுகடலை சட்னி இப்படி செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும். சுவையான பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது?

pottu-kadalai-chutney2
- Advertisement -

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது நிறைய தேங்காய் சேர்த்து அரைப்பது வழக்கம். பொட்டுகடலை குறைவாகவும், தேங்காய் அதிகமாகவும் சேர்க்கும் பொழுது இருக்கும் சுவையை விட, இந்த பொட்டுகடலை சட்னி அலாதியாக இருக்கப் போகிறது. தேங்காய் குறைவாகவும் பொட்டுக்கடலை அதிகமாகவும் போட்டு இப்படி ஒரு முறை பூண்டு தாளிச்சு சட்னி செஞ்சு பாருங்க, செம டேஸ்டாக இருக்கும். இனி அடிக்கடி இந்த சட்னி தான் உங்க வீட்டில் அரைக்க போறீங்க! இந்த சுவையான பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

பொட்டு கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பல் – 5, வர மிளகாய் – 4, துருவிய தேங்காய் – 2 ஸ்பூன், பொட்டுக் கடலை – ஒரு கப், கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், நறுக்கிய பூண்டு – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

பொட்டுக் கடலை சட்னி செய்முறை விளக்கம்:
ருசியான பொட்டு கடலை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு பொட்டுக் கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். இதர பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் துருவிய தேங்காய் மற்றும் ஒரு கப் அளவிற்கு பொட்டு கடலை சேர்க்க வேண்டும்.

பின்னர் இதனுடன் காரத்திற்கு வர மிளகாய் மற்றும் சுவைக்கு 5 பூண்டு பற்களை தோல் உரிக்காமல் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்டிக்கு தூள் உப்பு சேர்ப்பதை விட கொஞ்சம் போல் கல் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு இப்போது கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் இரண்டு பூண்டு பற்களை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுங்கள். பூண்டின் வாசனை இந்த சட்னிக்கு ரொம்பவே சூப்பராக இருக்கும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி தாளித்து சேர்த்து சட்னியுடன் கொட்டினால் அவ்வளவு அட்டகாசமான சூப்பரான பொட்டு கடலை சட்னி தயார்!

தேங்காய் குறைவாக இருப்பதால் இதில் பொட்டுக்கடலை உடைய சுவை தான் அதிகம் இருக்கும். மேலும் இதில் பூண்டு தாளித்து செய்வதால் ரொம்பவே சூப்பராக இருக்கும். தினமும் என்ன சமைப்பது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பொட்டு கடலை சட்னி இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம் என்பதால் ரொம்பவே உபயோகமானதாக இருக்கும். அதிக புரோட்டீன் நிறைந்துள்ள இந்த பொட்டுகடலை சட்னி அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள், ஆரோக்கியமும் வலுப்பெறும். நீங்களும் இதே போல ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க.

- Advertisement -