இந்த டிப்ஸையும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. சமைக்கும்போது, அச்சச்சோ! இந்த வேலையை செய்ய மறந்துட்டோமே, அப்படின்னு இனி யோசிக்கவே மாட்டாங்க!

puli
- Advertisement -

பெரும்பாலான பெண்கள் சமைக்கும் போது மறக்கக்கூடிய வேலை புளியை தண்ணீரில் போட்டு ஊற வைப்பது. குழம்பு வைக்கும்போது யோசிப்பார்கள். அச்சச்சோ, புளியை ஊற வைக்க மறந்து விட்டோமே என்று. அவசர அவசரமாக சமைக்கும் போது தான், இந்த புளி, தண்ணீரில் ஊறி இருக்காது. அதை சுடுதண்ணீரில் போட்டு ஒரு கரண்டியை வைத்து அழுத்தி, அந்த புளியை கரைத்து குழம்பில் சேர்ப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த புளிக்கரைசலை வைத்து பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவ்வளவு எளிமையாக நம் வீட்டில் தயார் செய்ய முடியாது.

puli1

புளி பேஸ்ட் க்கு பதிலாக உங்கள் வீட்டில் இருக்கும் புளியை வைத்து ஒரு ஸ்பெஷல் டிப்ஸ் இருக்கு. அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம். மூன்று அல்லது நான்கு எலுமிச்சம் பழம் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். கணிசமாக இரண்டு வாரத்திற்கு தேவையான புளி. இதற்கு மூன்று டம்ளர் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். புளி 30 நிமிடங்கள் தண்ணீரில் நன்றாக ஊறவேண்டும்.

- Advertisement -

இந்த புளி தண்ணீரில் நன்றாக ஊறிய பிறகு உங்கள் கையை கொண்டு நன்றாக ஒருமுறை கரைத்துக் கொள்ளுங்கள் போதும். கரைத்த புளிக்கரைசலை ஒரு பெரிய வடிகட்டியின் மூலம், திப்பி இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய வடிகட்டி உங்களிடம் இல்லை என்றால், மாவு சலிக்கும் சல்லடையில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

puli2

சாதாரணமாக புளி கரைசல் கரைப்பது போல் இரண்டு மூன்று முறை எல்லாம் தண்ணீர் ஊற்றி இந்த புளியை கரைக்க கூடாது. இப்போது நமக்கு முதல் முறை கரைத்த புளிக்கரைசல் கிடைத்திருக்கும். இது அப்படியே இருக்கட்டும். (உடனடியாக மீதமிருக்கும் புளியை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டாம். இந்த புளி திப்பி யோடு அரிசி மாவு உப்பு சேர்த்து பித்தளை பாத்திரங்கள், பூஜை பாத்திரங்கள் தேய்ப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.)

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கொள்ளுங்கள். இந்த புளி கரைசலுடன் 4 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள், இந்த புளி கரைசலை கொதிக்க விடுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

puli3

இப்போது இந்த புளி கரைசலை ஒரு தண்ணீர் இல்லாத பிளாஸ்டிக் பாட்டிலில் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் இரண்டு வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். இந்தப் புளிக்கரைசலில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரசத்திற்கு, குழம்புக்கு தேவைப்படும்போது அளவான புளியை ஊற்றி, சுலபமாக சமைத்துக் கொள்ளலாம். அடடா புளியை ஊற வைக்க மறந்து விட்டோமே என்ற பிரச்சனை இனி இல்லை. விடுமுறை நாட்களில் இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -