புளி கூட கரைத்து ஊற்ற வேண்டாம். வெறும் ஐந்தே நிமிடத்தில் கோவில் புளியோதரையை நம் வீட்டில் செய்ய, இந்த ஒரு பொடியே போதும். இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி அரைப்பது எப்படி.

pulisadam
- Advertisement -

புளி கூட கரைத்து ஊற்றாமல் மிக மிக சுலபமாக புளியோதரை செய்ய சூப்பரான ஒரு ஐடியாவை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் போதும். சாதம் வடித்து விட்டால் போதும். புளியோதரையை ஐந்தை நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். அதுவும் கோவில் புளியோதரை சுவையில். வேலைக்கு செல்பவர்களுக்கு, பேச்சுலர்ஸ், ஹாஸ்டலில் சமைப்பவர்களுக்கும் கூட இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சி வச்சுக்கோங்க.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 1/4 கப், உளுந்தம் பருப்பு – 1/4 கப், வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், எள்ளு – 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 4 கொத்து, நல்லெண்ணெய் – 1/4 ஸ்பூன், வர மிளகாய் – 10, புளி – 100 கிராம், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

- Advertisement -

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு 1/4 கப் என்றால் சின்ன டபரா எடுத்துக் கொள்ளுங்கள். காபி குடிப்பதற்கு டபரா செட் இருக்கும் அல்லவா. அதில் ஒரு கப் உளுந்தம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பும் எடுத்துக் கொண்டால், 100 கிராம் புளிக்கும் மற்ற மசாலா பொருட்களின் அளவிற்கும் சரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மெஷரிங் கப் இருந்தால் அதில் கால் கப் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு அளந்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து மேலே சொன்ன ஒவ்வொரு பொருட்களாக சேர்த்து நன்றாக வறுக்கவும். கடலை பருப்பு, உளுந்து, வர மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, கருவாப்பிலை கொத்து, இந்த எட்டு பொருட்களையும் எண்ணெய் எதுவும் ஊட்டாமல் ட்ரை ஆக, தனித்தனியாக ஒவ்வொரு பொருட்களாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக கடாயில் 1/4 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் விட்டு வரமிளகாய்களை போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு உடனடியாக அதிலிருந்து எண்ணெயை வடித்து எடுத்து விடுங்கள்‌.

- Advertisement -

பிறகு அந்த கடாயில் ஒட்டி இருக்கும் மீதம் எண்ணெயில் 100 கிராம் புளியை போட வேண்டும். புளியில் கொட்டை, ஓடு, நார் எதுவுமே இருக்கக்கூடாது. சுத்தம் செய்த புளியை சின்ன சின்ன துண்டுகளாக கைகள் ஆகவே பிரித்து இந்த கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். புளியில் இருக்கும் ஈரத்தன்மை அனைத்தும் நீங்கி புளி, 10 நிமிடத்தில் வறுபட்டு விடும். அடுப்பை அணைத்துவிட்டு, கடாய் சூட்டிலேயே புளியை விட்டு விடுங்கள். புளி நன்றாக ஆறட்டும். பிறகு தொட்டுப் பார்த்தால் புளியில் ஈர பசை சுத்தமாக இருக்காது. அந்த அளவுக்கு புளியை வறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வறுவட்ட பொருட்கள் எல்லாம் நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் வறுத்த புளி, வறுத்த வரமிளகாயை போட்டு அரைக்கவும். பிறகு இதோடு வறுத்த மற்ற பொருட்களை எல்லாம் கொட்டி, மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு எந்த அளவுக்கு நைஸ் ஆக அரைக்க முடியுமோ அந்த அளவுக்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து, பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்தால் ஈரம் படாமல் இருந்தால் மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

மேலே அந்த எட்டு பொருட்கள் சொல்லி இருக்கிறோம் அல்லவா. அதை எல்லாம் மணக்க மணக்க வாசம் வரும் வரை கருகாமல் வறுக்க வேண்டும் அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை வைத்து சாதத்தை எப்படி கலப்பது என்று பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை பஞ்சு போல மிருதுவாக எளிமையாக வீட்டில் எப்படி தயார் செய்வது?

வழக்கம்போல அடுப்பில் கடாயை வைத்து சாதத்திற்கு தேவையான அளவு நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், கருவேப்பிலை, தாளித்துக் கொள்ளவும். இந்த பொருட்கள் எல்லாம் வறுபட்டு வந்தவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை தேவையான அளவு தாளிப்பில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, வடித்து ஆற வைத்த சாதத்தை இதில் போட்டு கிளறினால் சூப்பரான புளியோதரை தயார். இன்ஸ்டன்ட் புளியோதரை ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -