ஒரு கைப்பிடி புதினாவும் மூணு தக்காளி இருந்தா ரொம்ப வித்தியாசமா சுவையில் இந்த சட்னியை அரைச்சு பாருங்க. இந்த சட்னியை ஒருமுறை சாப்ட்டா ஒரு வருசம் ஆனாலும் டேஸ்ட் நாக்கை விட்டு போகாது.

mint puthina chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு பரிமாறப்படும் இந்த சட்னி வகைகளில் பல உண்டு. அதில் புதினா சட்னியை தனியாகவும் தக்காளி சட்னி தனியாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் புதினா தக்காளி சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில் சூப்பரான ஒரு சட்னியை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க அந்த சட்னி ரெசிபியை பார்க்கலாம்.

செய்முறை

இந்த சட்னி செய்ய அடுப்பில் பேன் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு ஒன்னரை டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்த பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து இவை இரண்டும் பொன்னிறமாக சிவந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பருப்பு வகைகள் வாங்கிய பிறகு கடாயிலிருந்து எண்ணெய் தனியாக வடித்து விட்டு பருப்பை மட்டும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயில் எட்டிலிருந்து பத்து காய்ந்த மிளகாய் வரை சேர்த்து அதையும் லேசாக வறுத்தவுடன் பருப்புடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மீண்டும் அதே பேனில் இருக்கும் எண்ணெயில் மூன்று பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸில் நறுக்கி சேர்த்து அதையும் வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கும் போது அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கிய பிறகு 3 பெரிய பழுத்த தக்காளி அரிந்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு சின்ன துண்டு புளியையும் இதில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் பெருங்காயம் அனைத்தையும் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கைப்பிடி பிரஷ்ஷான புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சமாக கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை எல்லாம் அப்படியே ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்த பருப்பு மிளகாய் சேர்த்து பிறகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு வதக்கி ஆற வைத்த வெங்காயம், தக்காளி, புதினா எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போதும் தண்ணீர் சேர்க்க வேண்டாம் வெங்காயம் தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதும்.

இதையும் படிக்கலாமே:

அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிந்த பிறகு இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து இறக்கும் போது ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள். சுவையான தக்காளி புதினா சட்னி தயார்.

- Advertisement -