பிறக்கும் போதே அறிவாளிகளாக பிறக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.

brain jathagam
- Advertisement -

இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். இது தான் இயற்கையின் நியதி. இதையே தான் ஜோதிட சாஸ்திரமும் சொல்கிறது. அந்த வகையில் மானிடராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். இது அவரவரின் ராசி நட்சத்திரங்களுக்கு ஏற்ப மாறுபடும். இதை வைத்து தான் அவர்களுடைய குணநலன்களும் அவர்களுடைய வாழ்க்கைக்கான பலன்களும் கணிக்கப்படுகிறது

அதே போல் 12 ராசிகளும் ஒவ்வொரு கிரகத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்த வகையில் கிரகத்தின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் நிறைந்து இருக்கும். அது அவர்களின் பிறப்பு முதல் அவர்களுடன் இருக்கும். அந்த வகையில் சில ராசிக்காரர்கள் பிறப்பிலே புத்திசாலியாக இருப்பார்கள். அதை பற்றிய ஒரு தகவலை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிறப்பிலேயே புத்திசாலிகளாக இருக்கக் கூடிய ராசிக்காரர்கள்

மிதுன ராசி
இந்த ராசிக்காரர்கள் புதுமையான கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். எதையும் ஆழமாக சிந்தித்து செயலாற்ற கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக புத்திசாலித்தனத்துடன் இருப்பதுடன், எந்த ஒரு செயலையும் முழுமையாக புரிந்து கொண்டு அதை திறம்பட செய்து கொடுப்பவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்களைத் தேடி சவாலான பணிகள் வந்து கொண்டே இருக்கும். எப்படியானதாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

கன்னி ராசி
இவர்கள் எந்த செயலையும் திட்டமிட்டு செயல்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தொடங்கிய எந்த ஒரு செயலையும் திறம்பட முடிக்காமல் அதில் இருந்து வெளியே வர மாட்டார்கள். அது மட்டும் இன்றி ஒரு செயலை அறிவு கூர்மையுடன் ஆழமாக சிந்திக்கும் தன்மை இவர்களுக்கு இயல்பிலே உண்டு. அதில் நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து செயல்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் இவரே.

- Advertisement -

கும்ப ராசி
இவர்கள் எந்த ஒரு செயலையை எடுத்தாலும் அதனை அலசி ஆராயாமல் அதனை செயல்படுத்த மாட்டார்கள். புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி எந்த ஒரு திட்டத்தையும் பிரித்து ஆராய்ந்து திறம் படசெயல்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இயல்பிலேயே சிறப்பாக சிந்தித்து செயலாற்றக் கூடிய தன்மை கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான்.

இதையும் படிக்கலாமே: தொழில் நன்றாக சிறந்து நடைபெறுவதற்கு செய்யக்கூடிய வழிபாடுகளும் தானமும்.

பிறப்பிலே அதிக புத்திசாலித்தனம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயன்படும் விதமாய் இருப்பின் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -