துணிகளை பீரோவில் இப்படி எடுத்து அடுக்கி வைத்தால் கூட தரித்திரம் பிடிக்குமா? பீரோவில் வைக்கவே கூடாத துணிகள் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?

bero-lakshmi
- Advertisement -

பீரோவில் துணிகளை அடுக்கி வைப்பதால் தரித்திரம் பிடிக்குமா? பீரோ என்றாலே அது துணிகள் அடுக்கி வைப்பதற்கு தானே. அதில் எப்படி தரித்திரம் பிடிக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால் இப்படிப்பட்ட துணிகளை பீரோவில் அப்படியே எடுத்து வைப்பதன் மூலம் நிச்சயமாக தரித்திரம் பிடிக்கும். அது எப்படி எந்தெந்த துணிகளை பீரோவில் வைக்கக் கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம்சார்ந்த குறிப்புகளைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் இது. உங்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறலாம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் கிடையாது. எந்த தரித்திரமும் பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பீரோவில் வைக்க கூடாத ஆடைகள்:
கடைக்கு சென்று புதியதாக ஒரு ஆடையை வாங்குகின்றோம். புது துணி மனதுக்கு ரொம்ப பிடித்து இருக்கு. அதை வாங்கி அப்படியே கொண்டு வந்து மடித்து பீரோவில் வைத்து விடுவோம். அப்படி செய்யவே கூடாது. இப்போதெல்லாம் துணி வாங்கும் பழக்கம் ரொம்ப ரொம்ப ஸ்டைலா மாறிடுச்சு. அப்போதெல்லாம் துணிகளை எடுத்து தைத்து போடுவார்கள். கட்டாயமாக நாம் வாங்கிய புது துணியை இதற்கு முன்பாக வேறு யாரும் பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

இப்போது ரெடிமேட் என்ற பெயரில் துணிகள் வருவதால் அதை எல்லோரும் ஒரு மாடலுக்காக போட்டு பார்க்கிறார்கள். போட்டு பார்த்து விட்டு தான் துணிகளை எடுக்கவே செய்கிறார்கள். அடுத்தவர்கள் உடுத்திய துணி ஒரு பக்கம் இருக்க, அதை தான் நாம் இப்போது காசு கொடுத்து வாங்குகின்றோம். இன்னொரு பக்கம் அடுத்தவர்கள் பார்த்து ஏயக்கப்பட்ட துணி.

இந்த துணி ரொம்ப நல்லா இருக்குன்னு பார்ப்பாங்க. அதை டிரையல் பண்ணியும் பார்ப்பாங்க. ஏதோ ஒரு காரணத்தால் எடுக்க முடியாத சூழ்நிலை. அவர்களுடைய ஏக்கம் அந்த துணியில் இருக்கும். அதே துணியை நீங்கள் வாங்கி இருப்பீர்கள். அந்த ஏக்கமானது நிச்சயமாக உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதெல்லாம் இல்லை என்று சிலர் சொல்லி மனதை திருப்தி அடையச் செய்ய வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒருவருடைய ஆசை நிறைவேறாமல் போகும்போது, அந்த ஆசைக்கு உயிர் இருக்கும். அது அந்த ஆடையில் தங்கி இருக்கும். அப்படிப்பட்ட தோஷம் நிறைந்த ஆடையை நீங்கள் அணியும்போது உடல் சோர்வு ஏற்படும். உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சரிங்க பிறகு எப்படித்தான் புது துணிகளை வாங்குவது. எப்படித்தான் போடுவது.

ஒரு வழி இருக்குது. நீங்கள் வாங்கிய துணியை துவைக்க முடியும் என்றால் முதலில் சுத்தமான தண்ணீரில் நனைத்து அதை காய வைத்து விட்டு, அதன் பின்பு உடுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. மீண்டும், துவைத்து அதன் பின்பும் அடித்து பீரோவில் வைக்கலாம். இது ரொம்ப கஷ்டம். இந்த காலத்துக்கு செட்டாகாது. வாங்குற பாதி துணியை துவைப்பது கிடையாது. அப்படியே எடுத்து பீரோவில் வைத்து துவைக்காமல் சென்ட் அடிச்சு தான் போடுறோம். இப்ப என்ன பண்றது.

- Advertisement -

வாங்கிய துணியில் நான்கு முனைகளிலும் நன்றாக மஞ்சள் தடவி, லேசான மஞ்சள் தண்ணீரை அந்த துணியை சுற்றி தெளித்துவிட்டு நடுவே அந்த துணியை கொஞ்ச நேரம் வைத்து விட்டு, அதன் பிறகு எடுத்து நீங்கள் போடுங்கள். அதன் பிறகு எடுத்து பீரோவில் அடுக்கி வையுங்கள். அதுதான் சரி.

இதையும் படிக்கலாமே: பிரிய நினைக்கும் கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா? இதை சொன்னால் என்ன நடக்கும்?

எவ்வளவோ சினிமா ஸ்டார் எல்லாம் வாடகைக்கு துணி வாங்குறாங்க. ஒருத்தர் உடுத்திய துணியை இன்னொருத்தர் உடுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தோஷம் தாங்குதா? நேரமும் காலமும் தலையெழுத்தும் சரியாக இருக்கும் போது எந்த கெட்டதும் நம்மை எதுவும் செய்யாது. நம்முடைய நேரம் கொஞ்சம் தடுமாறட்டும், நல்லது செய்தால் கூட அது தவறாக முடியும். கெட்ட நேரத்தில் கூட நல்லது நடக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களை பின்பற்றலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -