சுவையான முள்ளங்கி வறுவல் ஒருமுறை இவ்வாறு சமைத்து பாருங்கள். சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

radish
- Advertisement -

முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது. ஆனால் இதன் சுவை பலருக்கும் விருப்பமானதாக இருப்பதில்லை. எனவே பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு வறுவல் போன்ற சுவையில் முள்ளங்கியையும் வறுத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

mullangi-5

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 5 பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் முள்ளங்கியை தோல் சீவி நன்றாகக் கழுவி வட்ட வடிவில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பூண்டைத் தோலுரித்து விட்டு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

radish-fry1

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு எனண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அறிந்து வைத்துள்ள முள்ளங்கியைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முள்ளங்கி, வெங்காயம், தக்காளியுடன் இவை அனைத்தும் சேர்ந்து பாதியளவு வதங்கியதும் முக்கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா இவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி விட வேண்டும். அதன்பின் இடித்து வைத்துள்ள பூண்டை இவற்றுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

vengayam thakkali

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை நன்றாக கிளறிவிட்டு, முள்ளங்கி நன்றாக சிவந்து வரும் வரை அடுப்பினை சிறு தீயில் வைத்து வேகவிட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி வறுவல் தயாராகிவிட்டது.

radish-fry3

இதனை துவரம்பருப்பு, தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து 5 விசில் வைத்து கடைந்து தாளித்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இவ்வளவு நாள் உருளைக்கிழங்கை மட்டுமே இவ்வாறு வறுத்து கொடுத்திருப்பீர்கள். அதனை மட்டுமே சுவைத்திருந்த உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த முள்ளங்கியை இவ்வாறு ஒருமுறை செய்து சாப்பிட கொடுத்து பாருங்கள். இதன் சுவைக்கு அவர்களும் அடிமையாகிவிடுவார்கள்.

- Advertisement -