கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

ragavendrar

பகவான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை பற்றி பலரும் அறிந்திருப்போம். அதில் ஒரு சிறு துளியை இந்த பதிவில் காண்போம். ஒரு சமயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சீடர்கள் மிகுந்த களைப்புற்றனர். இதை அறிந்த ராகவேந்திரர் எல்லோரும் சற்று ஓய்வடுத்து செல்லாம் என்று கூறினார். இதனால் ராகவேந்திரரின் பல்லக்கு கீழ் இறக்கப்பட்டது. அனைவரும் ஓர் இடத்தில் ஓய்வெடுத்தனர். அப்போது பல்லக்கில் இருந்து இறங்கிய ராகவேந்திரர் ஒரு கல் மேடை மீது அமர்ந்தார்.

Ragavendra

அப்போது வேகமாக ஒருவர் ஓடி வந்தார். ஐயா உங்களை பார்த்தல் ஏதோ பெரிய மகான் போல உள்ளீர்கள் நீங்கள் இந்த கல் மேடை மீது அமரவேண்டாம் தயவு செய்து வேறு இடத்தில் அமருங்கள் என்று அந்த ஆசாமி கூறினார். இதை கேட்டு சிரித்த ராகவேந்திரர் ஏனப்பா அப்படி கூறுகிறாய் என்றார். இந்த பகுதியை ஆண்ட நவாபின் மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டார் அவரின் சடலத்தை இன்று தான் இங்கு புதைத்து வைத்துள்ளோம்.

நீங்கள் நவாப்புடைய மகனின் கல்லறை மேல் அமர்ந்த விடயம் நவாபிற்கு தெரிந்தால் அவர் மிகுந்த கோவம் கொள்வார். ஆகையால் தயவு செய்து வேறு இடத்தில் அமருங்கள் என்றார் அந்த ஆசாமி. இதை கேட்டு மீண்டும் சிரித்த ராகவேந்திரர், உங்கள் நவாபிற்கு தன் பிள்ளை மீண்டும் உயிர் பெற்று வர ஆசை இருந்தால் அவரை உடனே இங்கு அழைத்து வா என்றார்.

sreeragavendra swamy

இதை கேட்டு அந்த ஆசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது இறந்தவரை எப்படி உயிர் பெற வைக்கமுடியும்? இருந்தாலும் இந்த செய்தியை நவாபிடம் தெரிவிப்போம் என்று எண்ணி வேக வேகமாக என்று அங்கு நடந்ததை நவாபிடம் சொன்னான் அந்த ஆசாமி. தன் மகன் சமாதி மேல் ஒருவர் அமர்ந்ததை கேட்டு நவாப் மிகுந்த கோவமுற்றான். ஆனாலும் ஒருவேளை அவர் கூறியது போல நம் மகனை மீண்டும் அவர் உயிர் பெற செய்தால் அது எவ்வளவு பெரிய அதிசயம் என்று எண்ணிய அந்த நவாப் ராகவேந்திரர் இருக்கும் இடத்திற்கு சென்றான்.

- Advertisement -

Ragavendra

பிறகு ராகவேந்திரர் அந்த சமாதியின் மீது இருந்து எழுந்து அந்த சமாதியை உடைத்து உள்ளே இருக்கும் சடலத்தை வெளியில் எடுக்க சொன்னார். அவர் சொன்னது போலவே நவாப்புடைய மகனின் சடலம் வெளியில் எடுக்கப்பட்டது. பிறகு தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரை எடுத்து ஏதோ மந்திரத்தை ஜபித்தபடியே அதை அந்த சடலத்தின் மீது தெளித்தார். உடனே நவாபின் மகன் ஏதோ தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்து அமர்ந்தான்.

இதையும் படிக்கலாமே:
முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்

இதை கண்ட நவாப் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்.இத்தனை பெரிய அதிசயத்தை நிகழ்த்திய ராகவேந்திரருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்றெண்ணினான். நவாபின் திருப்திக்காக அவர் அன்போடு கொடுத்த கிருஷ்ணாபூர் என்னும் கிராமத்தை ஸ்ரீ ராகவேந்திரர் மானியமாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு தன் யாத்திரையை மீண்டும் தொடர்ந்தார்..

சுவாரசியமான சிறு கதைகள், குட்டி கதைகள், ஜென் கதைகள் என அனைத்து விதமான தமிழ் கதைகளையும் உங்கள் மொபைலில் பெற  தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன் பெறுங்கள்.