தடைகளையும் எதிரி தொல்லைகளையும் நீக்கும் ரத்த சந்தனம்

ratha santhanam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் முன்னேற்றம் என்பது ஏற்பட்டால்தான் அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்த்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அந்த முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய எப்பேர்பட்ட செயலாக இருந்தாலும் அந்த செயல்களை நீக்குவதற்கு ரத்த சந்தனத்தை வைத்து எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய கஷ்டங்களையும், தடைகளையும், எதிரி தொல்லைகளையும் நீக்குவதற்கு பல தெய்வங்கள் உறுதுணையாக இருக்கின்றன. காளி, பைரவி, துர்க்கை, பைரவர், முனீஸ்வரர் என்று நாம் பல தெய்வங்களை கூறிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக திகழக்கூடியவர்தான் பகவதி அம்மன். எந்தவிதமான கெட்ட சக்திகளும் அண்டாமல் பாதுகாக்கும் ஒரு அற்புத தெய்வமாக தான் பகவதி அம்மன் திகழ்கிறார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட பகவதி அம்மன் ஆலயத்தில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிப்பாட்டு முறையாக தான் இந்த ரத்த சந்தன வழிபாடு திகழ்கிறது. இந்த வழிபாட்டை நாம் நம் வீட்டில் எந்த முறையில் செய்யலாம் என்று இப்பொழுது பார்ப்போம். எந்த தெய்வத்தை நீங்கள் மனதார நினைக்கிறீர்களோ அந்த தெய்வத்தின் படத்தை பூஜை அறையில் கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த தெய்வத்திற்கு நாம் இந்த ரத்த சந்தன வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

சுத்தமான ரத்த சந்தனத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் பன்னீரை ஊற்றி நன்றாக கெட்டியாக கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த ரத்த சந்தனத்தை நம்முடைய இஷ்ட தெய்வத்தின் மார்பிலும் பாதத்திலும் வைக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் வைத்தாலும் பரவாயில்லை. மறுநாள் காலையில் இந்த ரத்த சந்தனத்தை எடுத்து அதை இரண்டாக வைத்தால் அதை ஒன்றாக சேர்த்து அதற்கு நடுவில் சிறிது பள்ளம் செய்து அந்த பள்ளத்தில் மஞ்சளை வைத்து அதற்கு மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த ரத்த சந்தனத்தை தினமும் குலைத்து நம் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு முறை செய்தால் போதும் அந்த ரத்த சந்தனம் காலியாகும் வரை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ரத்த சந்தனம் தீர்ந்த பிறகு மறுபடியும் புதிதாக இதே போல் ரத்த சந்தன வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ரத்த சந்தனத்தை நம்முடைய நெற்றியில் வைக்கும் பொழுது “ஓம் பகவதி தாயே போற்றி” என்று பகவதி அம்மனை மனதார நினைத்து நெற்றியில் வைக்க வேண்டும்.

இப்படி நாம் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள், எதிரி தொல்லைகள், தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டிகள் என்று நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அந்த செயல்கள் நம்மை விட்டு நீங்கும்.

இதையும் படிக்கலாமே: மார்கழியில் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டிய பொருள்.

பகவதி அம்மனை முழு மனதோடு நம்பி இந்த ரத்த சந்தன வழிபாட்டை மேற்கொள்ளும் அனைவருக்கும் பகவதி அம்மனின் அருளால் அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -