காரசாரமாக நாவிற்கு சுவை தரும் காரச் சட்னியை சுலபமாக இப்படியும் செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சட்டுனு ஒரு சட்னி ரெசிபி.

tomato-coconut-chutney
- Advertisement -

பொதுவாகவே கார சட்னி என்றால் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட எல்லோருக்கும் பிடிக்கும். அந்த கார சட்னி பெரும்பாலும் எல்லோருடைய வயிற்றுக்கும் செட் ஆகாது என்று சொல்லுவார்கள். காரச்சட்னியை நாம கொஞ்சம் வித்தியாசமா இஞ்சி சேர்த்து செய்யப் போறோம். லேசான இஞ்சி வாசத்துடன் சுவை தரும் காரச் சட்னி செய்வது எப்படி? சுட சுட நாலு இட்லி சாப்பிடுறவங்க கூட, ஆறு இட்லி சாப்பிடுவாங்க. ரெண்டு தோசை சாப்பிடுபவர்கள் நாலு தோசை கட்டாயம் சாப்பிடுவீங்க. இந்த சட்னியின் சுவை அப்படி. ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் 3 இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி ஓரளவுக்கு சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, 6 வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் இருந்தால் 2 சேர்த்து, பொன்னிறமாக வறுத்து இந்த எண்ணெயை வடிகட்டி மிளகாயை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே எண்ணெயில் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை போட்டு, 2 நிமிடம் போல வதக்கி விட வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக பச்சை வாடை நீங்கி லேசான பிரவுன் நிறத்திற்கு வந்ததும், பொடியாக நறுக்கிய பழுத்த 2 பெரிய தக்காளி பழங்களை நறுக்கி போட்டு மீண்டும் வதக்குங்கள்.

வெங்காயம் தக்காளி இருக்கும் தடம் தெரியாமல் குழைய குழைய வதங்கி வந்ததும், தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

வறுத்த வர மிளகாய், இஞ்சி, வெங்காயம் தக்காளி, எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைக்க வேண்டும். சட்னியை ரொம்பவும் அரைத்து விடாதீர்கள். லேசாக கொரகொரப்பாக அரைக்க வேண்டும். 90 சதவிகிதம் சட்னி அரைபட்டால் போதும். அரைத்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பச்சை சுண்டைக்காய் குழம்புபை இப்படி மட்டும் வைச்சு பாருங்க, சுண்டைக்காயே பிடிக்காது என்பவர்கள் கூட சட்டி சோறை சைலன்டாக உள்ளே தள்ளுவார்கள்

தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து இந்த சட்னியில் கொட்டி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, திக்காக கரைக்க வேண்டும். சட்னி ரொம்பவும் தண்ணியாக கரைக்கக் கூடாது. சுட சுட இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டு பாருங்கள். லேசான இஞ்சி வாசத்தோடு, காரசாரமான சட்னி சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. காரச் சட்னி பிரியர்களுக்காக இந்த ரெசிபி.

- Advertisement -