உங்கள் தோட்டத்தில் இருக்கும் மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்கும் ரேஷன் கோதுமை மாவு! வாரம் ஒரு முறை இப்படி செய்தால் கொத்துக் கொத்தாக பூக்களையும், காய்களையும் அள்ளலாம்.

garden-plants-wheat
- Advertisement -

மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதன் மூலம் நம்முடைய பூச்செடிகள், காய்கறி செடிகள் நன்கு செழித்து வளரும். ஆனால் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருக நாம் என்ன செய்வது? கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் மண்ணில் இருப்பதால் தான் மண்ணுக்கு இயல்பாகவே நல்ல காற்றோட்டமும், ஆக்சிஜனும் கிடைக்கிறது. நாம் ரேஷன் கடையில் இருந்து வாங்கி வரும் கோதுமையில் அரைத்து வைத்த மாவு 4 டீஸ்பூன் இருந்தால் கூட போதும். நம் வீட்டுச் செடிகள் எல்லாம் கொத்துக் கொத்தாக பூக்களையும், காய், கனிகளையும் அள்ளிக் கொடுக்கும். ரேஷன் கோதுமையை உயிர் உரமாக மாற்றுவது எப்படி? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

wheat

ரேஷன் கடையில் இருந்து வாங்கி வரப்படும் கோதுமையை சுத்தம் செய்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் சப்பாத்தி சுட்டால் அவ்வளவு அருமையான ருசியுடன் இருக்கும். இதிலிருந்து 4 டீஸ்பூன் இருந்தால் கூட போதும். எல்லா வகையான பூச்செடி மற்றும் காய்கறிகளையும் அதிக அளவில் விளைச்சல் செய்ய முடியும். வாரம் ஒரு முறை இந்த உயிர் உரத்தை கொடுத்தால் போதும். ஆனால் அதை முறையாக எப்படி கொடுப்பது?

- Advertisement -

முதலில் 4 டீஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 டீஸ்பூன் அளவிற்கு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு இருந்தாலும் சரி, அதனை எடுத்து பொடித்து தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வெல்லம் கரைத்த தண்ணீர் மற்றும் கோதுமை மாவு கரைத்த தண்ணீர் ஆகிய இரண்டையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

wheat

இந்த கலவையுடன் சுமார் 5 லிட்டர் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை குறைந்தது 24 மணி நேரம், அதாவது ஒரு நாள் முழுக்க நன்கு ஊற விட வேண்டும். அப்பொழுது தான் தண்ணீரில் உயிர் சத்து உருவாகத் துவங்கும். உங்கள் கையில் வேறு எந்த உரமும் இல்லாத சமயங்களில் இந்த சுலபமான உரத்தை ஒரே நாளில் தயார் செய்து உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் எல்லா செடி வகைகளுக்கும் பயன்படுத்தி பயன் பெறலாம்.

- Advertisement -

24 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் மண் தொட்டிகளில் வேர் பகுதிகளில் ஊற்றி வர வேண்டும். இந்த உயிர் உரத்தை செடிகளின் இலைகளின் மேல் தெளிக்க வேண்டிய அவசியமில்லை. வேர்களுக்கு சென்றால் மட்டும் போதும். வேர்ப் பகுதிகள் மூலமாக மண்ணுக்கு சத்துக்கள் கிடைத்து மேலும் அதில் இருக்கும் நுண்ணுயிரிகளையும் பல்கிப் பெருகச் செய்யும். இதனால் செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

veggitable-plants

இனிப்பு தன்மை கலந்து இருப்பதால் கூடுமானவரை அதிகமாக தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருங்கள். தண்ணீரை குறைவாக சேர்த்துக் கொண்டால் எறும்புகள் தொந்தரவு வந்துவிடும். எனவே கூடுதலாக தண்ணீரை சேர்த்து வேர்களுக்கு ஊற்றி வாருங்கள். வாரம் ஒரு முறை இது போல் செய்ய பத்து பைசா செலவில்லாமல் உங்கள் வீட்டு செடிகளுக்கு, மாடி தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு நல்ல சத்து கிடைத்து நுண்ணுயிரிகள் பெருகி நிறைய பூக்களையும், காய், கனிகளையும் உங்களுக்கு வாரி வழங்கும்.

- Advertisement -