வீட்ல ரவை இருக்கா? அப்போ ரொம்ப வித்தியாசமான சுவையில் இந்த ரெசிபி செஞ்சி பாருங்க. எப்பொழுதும் இட்லி தோசை என ஒரே மாதிரி செய்யாமல் புதிதாக டிபன் ரெசிபி செய்யலாம் வாங்க.

ravai adai
- Advertisement -

காலை நேரத்தில் டிபன் என்றதும் நம் நினைவிற்கு வருவது இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் வகைகளே. மிகவும் வித்தியாசமான வகையில் ரவையை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தார் போல் அருமையான ஒரு டிபனை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செய்முறை

அதற்கு நாம் முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுக்க வேண்டும். அதில் 1/2 கப் ரவையை சேர்க்க வேண்டும். அத்துடன் 1/4 கப் கோதுமை மாவை சேர்க்க வேண்டும். அதில் நறுக்கிய ஒரு வெங்காயம், 1 இன்ச் இஞ்சி, 1 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துருவிய கேரட் 1, தேவையான அளவு உப்பு, 1/2 கப் புளிக்காத தயிர், இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கரண்டியை வைத்து நாம் அந்த மாவை கலக்கும் போது மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. அதே சமயம் தோசை மாவு பதத்திற்கு தண்ணியாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் நடுவில் இருக்க வேண்டும். அந்த அளவு வரும் வரை சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி விட வேண்டும்.

இதை ஒரு 20 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும். அப்பொழுது தான் நாம் ஊற்றும் தோசையானது மிகவும் மென்மையாக வரும். ஊற வைக்க நேரம் இல்லாதவர்கள் இதில் ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் சோடாவை சேர்த்து உடனடியாகவும் தோசை ஊற்றலாம்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தவா வைக்க வேண்டும். தவா நன்றாக சூடானதும், அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து கடாயின் நடுவில் ஊற்ற வேண்டும். அதை தோசை போல் இழுக்க கூடாது. சிறிது கனமாக ஊத்தாப்பம் ஊற்றுவது போல் இருக்க வேண்டும்.

பிறகு ஒரு மூடியை வைத்து அதை மூடி வேக வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து அதை திருப்பிப் போட்டு மறுபடியும் வேக வைக்க வேண்டும். இது இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு அதை எடுத்து சாப்பிடுவதற்கு பரிமாறலாம். மிகவும் வித்தியாசமான சுவையில் எளிமையான டிபன் தயாராகி விட்டது.

இந்த ரெசிபிக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. இதில் வெங்காயம், கேரட் போன்ற அனைத்தும் சேர்த்து அரைத்து இருப்பதால் இதன் சுவை ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -