இத்தனை நாளா இது தெரியாதா உங்களுக்கு! பொங்கலுக்கு வாங்கிய இந்த பச்சை மஞ்சளை இப்படி கூட செய்யலாமே!

row-turmuric
- Advertisement -

நம்முடைய வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் தைப்பொங்கல் நிறைவாக முடிவடைந்தது. எல்லோரது வீட்டிலும் இந்த பச்சை மஞ்சள் கிழங்கு இருக்கும். இதை பச்சையாகவே துருவி வெயிலில் உலர வைத்து மிக்சியில் பொடி செய்து, மஞ்சள் பொடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர இந்த பச்சை மஞ்சள் கிழங்கை ஆரோக்கியமான பச்சை மஞ்சள் ஊறுகாயாக எப்படி மாற்றுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலருக்கு இந்த குறிப்பு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த குறிப்பு.

row-turmuric1

1/4 கிலோ அளவு பச்சை மஞ்சளுக்கு இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகள் சரியாக இருக்கும். முதலில் பச்சை மஞ்சளில் இருக்கும் தோலை நன்றாக சீவி விட்டு, கேரட் பீட்ரூட் துருவும் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவேண்டும். துருவுவதற்கு முன்பாக மஞ்சளில் இருக்கும் மண்ணை சுத்தமாக கழுவி விடுங்கள். இந்த மஞ்சள் துருவல் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தில் இருந்து கொட்டை இல்லாமல் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

elumichai lemon

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சூடானதும் வெந்தயம் – 2 ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன், வரமிளகாய் – 15, கல்லுப்பு – 4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெருங்காயத்தை மட்டும் அடுப்பை அணைத்து விட்டு இறுதியாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் மீது வைத்து 100ml அளவு நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் 1 ஸ்பூன் அளவு கடுகு, சேர்த்து பொரிய விடவேண்டும். அதன்பின்பு ஒரு கொத்து அளவு கறிவேப்பிலையை போட்டு பொரிய விடுங்கள். அடுத்தபடியாக, முதலில் துருவி வைத்த மஞ்சளை சேர்த்து பச்சை வாடை போகும் வரை, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.

row-turmuric2

பச்சை மஞ்சளின் பச்சை வாடை நீங்கிய பின்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அடுத்து, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை பழ சாரை மஞ்சளோடு சேர்த்து சிடசிடப்பு அடங்கும் வரை கொதிக்க விட்டு, அதாவது இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த ஊறுகாய் அப்படியே நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

row-turmuric3

அதன் பின்பு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து பிரிட்ஜில் வைத்தால் 6 மாதங்கள் வரை கூட இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போகும் என்ற பயம் இல்லை. இந்தப் பச்சை மஞ்சள் ஊறுகாயை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். ஜீரணசக்தியை அதிகப்படுத்தும். ஆரோக்கியத்தை கொடுக்கும் ஊறுகாய் இது. தயிர் சாதம், எலுமிச்சம்பழ சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
கடுமையான எண்ணெய் பிசுக்கு படிந்த சமையலறை டைல்ஸ் கறைகளை சுலபமாக போக்க இந்த 1 பொருள் போதும். இதற்கு வினிகர் வேண்டாம். சோடா உப்பு வேண்டாம் வாஷிங் லிக்விட் கூட வேண்டாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -