கடுமையான எண்ணெய் பிசுக்கு படிந்த சமையலறை டைல்ஸ் கறைகளை சுலபமாக போக்க இந்த 1 பொருள் போதும். இதற்கு வினிகர் வேண்டாம். சோடா உப்பு வேண்டாம் வாஷிங் லிக்விட் கூட வேண்டாம்.

kitchen
- Advertisement -

கடுமையான எண்ணெய்ப் பிசுக்கு படிந்த கறைகளை சுத்தம் செய்வது மிகவும் கடினம். குறிப்பாக சமையலறையில் ஸ்டவுக்கு பின்னால் இருக்கும் இடத்தை சுத்தம் செய்வதற்குள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கை வலி, கழுத்து வலியும் வந்துவிடும். அடுத்தபடியாக சமையலறையில் முழுவதும் ஒட்டி இருக்கும் டையில்ஸில் எண்ணெய் பிசுக்கு படித்திருக்கும். அலமாரிகளில் போட்டிருக்கும் கருப்பு நிற கல்லிலும், எண்ணெய் பிசுக்கு படிந்திருக்கும். இதேபோல் சமையலறையில் எக்ஸாஸ் ஃபேன்க்கு, கீழே எண்ணெய் கறை படிந்து, ஒழுக ஆரம்பித்திருக்கும். இப்படிப்பட்ட கடுமையான கறைகளை கூட நீக்க ஒரு சுலபமான வழி உள்ளது.

cleaning

இதற்காக க்ளீனிங் லிக்விட், வினிகர், சோடா உப்பு, எலுமிச்சை பழம், தேய்க்க ஸ்டீல் நார் கூட தேவையில்லை. ஒரு காட்டன் துணியும், கூடவே இந்த ஒரு பொருளுமே போதும். அது என்ன பொருள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

- Advertisement -

ஹார்ட்வேர் கடைகளில் விற்கும் தின்னர்(thinner) என்று சொல்லப்படும் பொருள் தான் அது. இதன் விலை கூட அவ்வளவு அதிகமாக இருக்காது. பாட்டில்களில் கிடைக்கும். வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சமையலறை தவிர்த்து வேறு ஏதாவது இடங்களில் தான் இந்த thinner வைக்க வேண்டும்.

thinner

இந்த ஒரு பொருளை பயன்படுத்தி, உங்களது சமையல் அறையை சுத்தம் செய்வதற்கு முன்பாக, கேஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். கேஸ் சிலிண்டரையும் ஆஃப் செய்துவிட வேண்டும். காரணம் ஒரு பாதுகாப்பிற்காக தான். ஒரு சிறிய காட்டன் துணியில், கொஞ்சமாக thinner தொட்டு எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் துடைத்து கொடுத்தாலே போதும். எண்ணெய்ப் பிசுக்கு முழுமையாக நீங்கிவிடும்.

- Advertisement -

லேசாக எண்ணெய் பிசுக்கை துணியால் துடைத்து எடுத்தாலே போதும். நீண்டநாட்களாக படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு என்றால் சாதாரண பாத்திரம் தேய்க்கும் ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்தாலும், அந்த எண்ணெயானது நீங்கிவிடும். thinner ரை பயன்படுத்தி டைல்ஸ் சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் ஒரு காட்டன் துணியில் தண்ணீரைத் தொட்டு டயல்சை இரண்டாவது முறை துடைக்க வேண்டியது மிக மிக அவசியம்.

cleaning1

thinner ரை துடைப்பதற்கு பயன்படுத்தும் போது, கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். thinner பயன்படுத்தி சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு, அதன் பின்பு சாதாரண ஈரத் துணியில் துடைத்து சுத்தம் செய்யும் வரை அடுப்பை பற்ற வைக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

cleaning2

குறிப்பாக நல்லெண்ணெய் கடலெண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான எண்ணெய் பசையால் பிரச்சனை இருக்காது. ஆனால் ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்துபவர்களது வீட்டில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த குறிப்பை ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! புடிச்சிருந்தா ஃபாலோ பண்ணிக்கோங்க.

இதையும் படிக்கலாமே
எவர்சில்வர் பாத்திரத்தில் பால் சுண்டி தீய்ந்து போய் விட்டதா? 5 நிமிஷத்துல கை கூட வைக்காமல் சுத்தம் செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -