திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள்

marriagel

பிள்ளைகள் படிப்பை முடித்து விட்டு, நல்ல வேலைக்கு செல்லும் போது கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட அந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்க்கும் போது தான் பெற்றவர்களின் மனது நிம்மதி அடைகிறது. தன் பிள்ளையின் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. குரு பலனும் இருக்கிறது. ஆனால் திருமணம் மட்டும் ஆகவில்லை என்ற பிரச்சனை பல பெற்றோருக்கு உள்ளது. அதுவும் நம் பிள்ளைகளுடன் படித்தவர்கள், நண்பர்கள் இவர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து இருக்கும். ஆனால் தன் பிள்ளைக்கு மட்டும் முடியவில்லையே என்ற ஆதங்கம் அந்த பெற்ற தாயை வாட்டிவதைக்கும். அது அந்தத் தாயின் பொறாமை அல்ல. ஏக்கம். தன் பிள்ளைக்கு திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் இந்த பரிகாரத்தினை தங்களது பிள்ளைகளுக்காக செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

Marriage

நம் அனைவரும் அறிந்தது தான் விரலி மஞ்சள். இதனை 27 என்ற கணக்கில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விரலிமஞ்சளின் மேலும் குங்குமப் பொட்டினை இட்டுக்கொள்ள வேண்டும். குங்குமப் பொட்டிட்டு வைத்த 27 விரலி மஞ்சளையும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, அந்த அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து மனதார உங்களது பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்ளவும்.

அந்த விரலி மஞ்சளில் ஒன்றை எடுத்து மஞ்சள் கயிறில் கட்டி அம்மனுக்கு சாத்தி விட வேண்டும். மீதமுள்ள மஞ்சளை சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலத்தில் வைத்து ஒரு ரவிக்கை துணியுடன் தானமாக கொடுக்க வேண்டும். இவற்றை தானமாகப் பெற்றுக் கொண்ட சுமங்கலிப் பெண்ணின் கைகளால் திருமணமாகாத உங்களது பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்கள், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

thaali kayiru

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வர வேண்டும். 21 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே உங்களது குழந்தைக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் நிச்சயக்கப்பட்டாலும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து முடித்து விடுங்கள். 21 வது வாரம் பரிகாரம் முடியும் போது உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து அன்னதானம் செய்வது சிறப்பு.

- Advertisement -

உங்களால் முடிந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு, ஒற்றைப்படையில் அதாவது 5,3,11 என்ற கணக்கில் உங்கள் வீட்டிற்கு அழைத்து ஒருவேளை அன்னதானம் செய்து தாம்பூலம் கொடுப்பது, இன்னும் சிறந்த பலனைக் கொடுக்கும். நீங்கள் இந்த பரிகாரங்களை செய்யும் போது மனதார, பிள்ளைக்கு விரைவாக திருமணம் நடந்து விடும் என்ற நேர்மறை ஆற்றலுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைக்கு வரம் பார்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்துவதனாலும், அம்மனின் ஆசியினாலும் திருமணம் விரைவில் நடக்கும்.

marriage

உங்களால் முடிந்தால் உங்கள் வசதிக்கு தகுந்தவாறு ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இந்த புண்ணியமானது உங்கள் பரம்பரைக்கே தொடரும் என்கிறது சாஸ்திரம். மற்றவர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்று நாம் செய்யும் ஒரு சிறு உதவி காலத்திற்கும் நம்மை பின் தொடரும்.

இதையும் படிக்கலாமே
கருட புராணம் கூறும் தானம் செய்வதற்கான பலன்கள்

English Overview:
Here we have Thirumana thadai neenga pariharam in Tamil. Thirumana pariharam Tamil. Pariharam for getting marraige Tamil. Thirumana thadai neenga valipadu Tamil.