ரெஸ்டாரண்ட்டில் பின்பற்றும் ரகசியத்தை தெரிந்து கொண்டு, நீங்களும் இப்படி ஒரு வெஜிடபிள் குருமாவை உங்கள் வீட்டில் செய்தால், எத்தனை தோசை கொடுத்தாலும் தட்டாமல் சாப்பிடுவார்கள்

kuruma
- Advertisement -

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் இவை அனைத்தையும் சேர்த்து செய்யும் குருமாவை தான் ஹோட்டல்களிலும் செய்கின்றனர். ஆனால் வீட்டில் செய்யும் குருமாவின் சுவையை விட ஹோட்டலில் செய்யும் குருமாவின் சுவை அதிகமாக இருக்கிறது. இதனைத்தான் குழந்தைகளும் விரும்புகின்றனர். சொல்லப்போனால் பெரியவர்களுக்கும் அந்த சுவை தான் பிடிக்கிறது. இப்படி அவர்கள் செய்யும் உணவில் மட்டும் எப்படி தனிப்பட்ட சுவை கிடைக்கிறது என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகமாகும். ஒவ்வொரு ஓட்டலிலும் ஒவ்வொரு சுவை இருக்கும். அவரவர்கென்று இருக்கும் ரகசியத்தை எப்பொழுதும் வெளியில் சொல்வதில்லை. தனக்கென்று ஒரு தனித்துவத்தை வைத்திருக்கின்றனர். அப்படி ஹோட்டல்களில் செய்யும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்கு சில டிப்ஸ்களை பின்பற்றுகின்றனர். வாருங்கள் அதனை நாமும் தெரிந்து கொண்டு சுவையான வெஜிடபிள் குருமாவை வீட்டிலேயும் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 2, கேரட் – 1, பீன்ஸ் – 10, உருளைக்கிழங்கு – 1, பச்சைப் பட்டாணி – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – 2 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், முந்திரிபருப்பு – 10, கசகசா – ஒரு ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, காய்ச்சிய பால் – அரை கப், சர்க்கரை – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். அதன் பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தேங்காய் சேர்க்க வேண்டும். பிறகு 10 முந்திரிப்பருப்பு, ஒரு ஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை சேர்த்து, இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, அதனுடன் அரை கப் பால் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து குக்கரை மூடி காய்கறிகள் வேகும் வரை ஒரு விசில் வைத்து வேக விடவேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி விட்டால் வெஜிடபிள் குருமா தயாராகிவிடும்.

- Advertisement -