ரோட்டு கடை வெங்காய சட்னி ருசியாக இருக்க இதுதான் சீக்ரெட் தெரியுமா? இதை ரொம்ப டேஸ்டியா நாமும் எளிதாக வீட்டில் எப்படி தயாரிக்கலாம்?

vengaya-onion-chutney_tamil
- Advertisement -

ரோட்டு கடைகளில் இருக்கும் வெங்காய சட்னியின் ருசியே அலாதியானதாக இருக்கும். குறிப்பாக கெட்டியாக கொடுக்கும் இந்த சட்னி எப்படிடா செய்றாங்க அப்படின்னு நாம நிறைய வாட்டி நினைச்சி இருப்போம். ரொம்பவே டேஸ்டியான இந்த கெட்டி வெங்காய சட்னி எப்படி ருசியாக நம் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ரெண்டு டீஸ்பூன், பூண்டு – பத்து பற்கள், சின்ன வெங்காயம் – 15, பெரிய வெங்காயம் – இரண்டு, வரமிளகாய் – 6, சீரகம் – கால் ஸ்பூன், தக்காளி – ஒன்று, கருவேப்பிலை – 2 கொத்து, புதினா – 20 இலை, கொத்தமல்லி – சிறிதளவு, புளி – சிறு கோலிகுண்டு அளவு, பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

வெங்காய சட்னி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு ஸ்பூன் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பத்து பூண்டு பற்கள், 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள்.

இவை லேசாக வதங்கி வரும் பொழுது நீளவாக்கில் இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நிறம் கொடுக்க காஷ்மீரி மிளகாய் இருந்தாலும் நான்கு சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் இதனுடன் சீரகம் கால் ஸ்பூனுக்கும் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் கொஞ்சம் சேர்த்தாலும் மணம் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு சிறிய தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்குங்கள். என்னதான் புளி சேர்த்தாலும் ஒரு தக்காளி சேர்க்கும் பொழுது அதன் ருசி தனியாக தெரியும். பின் சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் இரண்டு கொத்து கருவேப்பிலை, கொஞ்சம் மல்லித்தழை, கொஞ்சம் அதே அளவிற்கு புதினா இலைகளை சேர்த்து சுருள வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அட, கோதுமை மாவில் இப்படி கூட முறுக்கு சுடலாமா? இந்த முறுக்கு ரெசிபியின் ரகசியம் உங்க கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாது.

அதன் பிறகு இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் சேர்க்கும் பொழுது வெங்காய சட்னி ருசி தனியாக இருக்கும். அனைத்தையும் நன்கு மசிய வதக்கி விட்ட பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து ரொம்பவும் நைசாக அல்லாமல் கொரகொரவென்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுத்து இட்லி, தோசை உடன் தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். வெங்காய சட்னி என்றால் இப்படித்தான் செய்யணும்னு இனி நீங்களும் செய்ய ஆரம்பிப்பீங்க, ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -