ஒரு வீட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடந்தால்,  நிச்சயமாக அது அபசகுனம் தான்.  வரக்கூடிய கஷ்டத்தை தடுக்க என்ன பரிகாரம் செய்யலாம்?

amman1
- Advertisement -

நம்முடைய வீட்டில் எதேர்ச்சையாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால், அந்த சம்பவத்தை வைத்து நம்முடைய வீட்டில் கெடுதல் நமக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த சம்பவங்களில் சிலவற்றை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். சகுனத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

broken-glass

நம்முடைய வீட்டில் பால் திரிந்து போவது அதாவது பால் கெட்டு போவது, அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிவது, கைதவறி குங்குமம் மஞ்சள் கீழே விழுவது, ஆடைகளில் நெருப்பு பிடிப்பது, ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் திடீரென்று கீழே விழுந்து உடைவது, வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருள் பீங்கான் பொருள் இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் உடைவது, எரிந்து கொண்டிருக்கும் தீபம் தானாகவே காற்றில் அனைத்து போவது, இப்படி பல விஷயங்கள் நம் வீட்டிற்கு அபசகுனம் என்று, நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த வரிசையில் குறிப்பாக, ஒருவருடைய வீட்டில் உப்பு கீழே கொட்டிவிட்டால் அல்லது உப்பு ஜாடி உடைந்து விட்டாலோ, நிச்சயமாக அந்த வீட்டில் கஷ்டம் வரும் என்றும் நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். சரி தான். ஒருவருடைய வீட்டில் உப்பையும், உப்பு ஜாதியையும் கீழே சிதற விட்டால் அதன் மூலம் அவர்களுடைய வீட்டில் பண கஷ்டம், வறுமை வரும். இதை நம்மில் பலபேர் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம்.

milk-boiling-stove

விளக்கு வைத்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராமல் உப்பைக் கீழே தவற விட்டு விட்டால், அதன் மூலம் பயப்பட வேண்டாம். உங்களுடைய வீட்டில் இந்த சம்பவம் நடந்து, அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் சிறியதாக மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜையில் மீண்டும் ஒரு புதிய பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி ஜாடியையோ வாங்கி வைத்து, அதில் முதலில் ஒரு மஞ்சள் கிழங்கை போட்டு, அதன் பின்பு மஞ்சள் கிழங்கின் மேல் கல்லுப்பைக் கொட்டி, அதன் மேலே 1 ரூபாய் நாணயத்தை வைத்து, நடந்த தவறுக்கு மகாலட்சுமியிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நீங்கள் உப்பை தவிர விட்டதன் மூலம் உங்களுடைய வீட்டில் எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை முடித்த பின்பு, இந்த உப்பு ஜாடியை உங்கள் வீட்டு சமையல் அறையில் வைத்து சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த 1 ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் அறியாமல், தெரியாமல் செய்த தவறின் மூலம் உங்களுக்கு தோஷம் எதுவும் ஏற்படாது.

salt

சரி, உப்பு கொட்டி விட்டால் இந்த பரிகாரத்தை செய்து விடலாம். மற்றபடி முதலில் மேலே சொல்லப்பட்ட அதாவது, பால் பொங்கி விட்டாலோ அல்லது புடவையில் தீ பிடித்தாலோ இப்படிப்பட்ட அபசகுனங்களுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

virali-manjal

உங்களது மனம் வருந்தும் படியான ஏதாவது அபசகுனம் உங்களுடைய வீட்டில் நடந்து விட்டால், உங்களது குடும்பத்தோடு ஒரு முறை குல தெய்வ கோவிலுக்கு சென்று, குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வைத்து, குறிப்பாக பசும்பால் வாங்கிக்கொடுத்து அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம், தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய், நெய் போன்ற பொருட்களை தானமாக கொடுத்து, வீட்டில் எந்த ஒரு கெடுதலும் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலை வைத்துக் கொள்ளலாம்.

kamatchi-amman

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோவில்களுக்கு சென்று, அம்மனுக்கு புடவை சாத்தி, மஞ்சள் குங்குமம் வாங்கி கொடுத்து, குங்கும அர்ச்சனை செய்து, வழிபாடு செய்யலாம். குடும்பத்தோடு சென்று உங்கள் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள்.

temple-lemon

அறியாமல் நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் மூலம் நமக்கு பெரிய பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயம் முதலில் நம் மனதில் இருக்கக்கூடாது. கெடுதல் நடந்துவிடுமோ என்ற எண்ணம் இருந்தால், கெடுதல் நடப்பதற்கு, நம் எண்ணமே ஒரு காரணமாக அமைந்து விடும். இப்படிப்பட்ட அபச குனத்தால் கெடுதல் நடக்காது, இறைவழிபாடு செய்து விட்டோம், நன்மையே நடக்கும் என்று நம்புங்கள். எல்லாம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெயர், புகழ், பதவி, பட்டம், இவையோடு சேர்ந்து பணமும் உங்களைத் தேடி வர, 3 முறை மோதிர விரலால் இதை எழுதினாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -