சமையலுக்கு தேவையான 10 பயனுள்ள குறிப்புகள். கிச்சன் கில்லாடிகளாக இந்த குறிப்புகளும் கொஞ்சம் அவசியம் தான்.

kitchen-tips
- Advertisement -

நாம தெரிந்து வைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட சின்ன சின்ன குறிப்புகள் கூட அவசரத்துக்கு நமக்கு பெரிய அளவில் பயன்படும். உங்களுடைய சமையலுக்கு வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன பயனுள்ள குறிப்புகள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பயனுள்ள 10  குறிப்புகளையும் தெரிஞ்சிக்கோங்க. தேவையானபோது ஒவ்வொன்றாக ட்ரை பண்ணி பாருங்க.

pachai_payaru

Tip 1
பச்சை பயிரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அந்த எண்ணெயை பச்சைப்பயிறில் முழுவதும் படும்படி கலந்து வைத்து வைத்தால், பச்சைப்பயிறு சீக்கிரம் வண்டு பிடிக்காது. பச்சை பயிரில் சீக்கிரம் ஓட்டை விழுகாது. உங்களுடைய வீட்டில் எவ்வளவு பச்சை பயிறு இருக்கிறதோ அதற்கு தகுந்தது போல் 1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றினால் போதும்.

- Advertisement -

Tip 2
முருங்கைக்கீரையை அப்படியே காம்பு இல்லாமல் உருவி எடுப்பது மிக மிக கஷ்டம். வாங்கிய முருங்கைகீரை கட்டை அப்படியே ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து சுருட்டி 3 மணி நேரம் வைத்து விடுங்கள். அதன் பின்பு நியூஸ்பேபர் உள்ளே இருக்கும் முருங்கைக் கீரையை எடுத்து உலுகினால் அப்படியே கீரை காம்புகள் இல்லாமல் உதிர்ந்துவிடும்.

Murungai keerai

Tip 3
வீட்டில் குழந்தைகள் படுத்து உறங்கும் பொழுது அவர்களுடைய அருகில் எறும்புகள் கூட்டம் தேடிவரும். காரணம் அவர்கள் சாப்பிட்டு விட்டு கைகளை வாயை சுத்தம் செய்திருக்க மாட்டார்கள். சட்டையில் உணவுப்பொருட்கள் எல்லாம் சிந்திக்கும். இப்படி அவர்கள் படுத்து உறங்கும் போது எறும்புகள் தொந்தரவு இருந்தால், அவர்களை சுற்றி கொஞ்சம் முகத்திற்கு போடும் பவுடரை தூவி கொட்டி விடுங்கள். குழந்தைகளை எறும்புகள் தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

- Advertisement -

Tip 4
வீட்டில் எந்த மாவு அரைத்து வைத்து இருந்தாலும் சரி, அதில் நான்கைந்து மிளகு களைப் போட்டு வைத்தால், மாவு கட்டிகள் பிடிக்காமல், பூச்சிகள் பிடிக்காமல் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்கும். உதாரணத்திற்கு கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு இப்படிப்பட்ட மாவில் நான்கு மிளகை போட்டு வைத்து பாருங்கள்.

Milagu benefits in Tamil

Tip 5
பூண்டின் மேல் காம்பு பகுதியை லேசாக நெருப்பில் வைத்து சூடு செய்து விட்டு அதன் பின்பு, பூண்டு ஸ்டோர் செய்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது. ஆனால் பூண்டை நெருப்பில் வைத்து வேக வைக்க கூடாது. கவனமாக தலைப்பகுதியான காம்பு பகுதியை மட்டும் நெருப்பில் காட்டி லேசாக கருப்பாக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

Garlic(Poondu)

Tip 6
பாத்ரூம் கழுவும் போது தரையில் லிக்விட் ஊற்றி கழுவினால், கால் வழுக்கும். பாத்ரூம் கழுவும் போது லேசாக தரையில் கோலப்பொடியை தூவி அதன் பின்பு கழுவிப் பாருங்கள். கால் வழுக்காமல் இருக்கும். பாத்ரூம் தரையில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக சுலபமாக நீங்கிவிடும். கோலமாவு பைப்பில் நிச்சயம் அடைக்காது.

bathroom-freshner

Tip 7
வெட்டிய பாதி வெங்காயத்தை ஸ்டோர் செய்ய வேண்டுமென்றால், வெட்டிய பகுதியில் லேசாக உப்புத் தூளைத் தூவி, தடவி அதன் பின்பு ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தில் கிருமிகள் சேராது. (முடிந்தவரை வெட்டிய வெங்காயத்தை நீண்டநேரம் திறந்து வைக்கக் கூடாது. வெட்டிய வெங்காயத்தை உடனடியாக பயன்படுத்துவது தான் ஆரோக்கியம்.)

Tip 8
ஒரு அழகு குறிப்பு. சிலசமயம் நாம் வெளியே செல்லும்போது தலை எண்ணெய் படிந்து மொழுமொழுவென இருக்கும். உடனடியாக தலைக்கு குளிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படி இருக்கும் போது தலைக்கு மேலே லேசாக முகத்திற்கு போடும் பவுடரை தூவி விட்டு, அதன் பின்பு சீப்பை வைத்து வாரினால் தலையில் இருக்கும் எண்ணெய் நீங்கி தலை பார்ப்பதற்கு அழகாக மாறிவிடும். வெள்ளை திட்டுகளாக பவுடர் வெளியே தெரியாது. லேசாக பவுடர் போட்டாலே போதும்.

wet-cloth

Tip 10
புதியதாக வாங்கிய காட்டன் துணிகளை வெறும் தண்ணீரில் துவைத்தால் நிச்சயம் சாயம் போகும். நீங்கள் முதல் முறையாக புதிய காட்டன் துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது கல் உப்பு, சிறிது ஷாம்பு சேர்த்து வைத்து அதன் பின்பு காட்டன் துணிகளை நனைத்து துடைத்தால் துணிகளில் இருக்கும் சாயம் நீங்காமல் இருக்கும்.

- Advertisement -