தக்காளி, வெங்காயம் இல்லாமல் செய்யும் இந்த சுவையான சாம்பாரை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு அசந்து போய்விடுவீர்கள்

sambar
- Advertisement -

அனைவரது வீட்டிலும் அடிக்கடி செய்கின்ற ஒரு குழம்பு என்றால் அது சாம்பார் தான். வாரத்தில் மூன்று முறையாவது எல்லோருடைய வீட்டிலும் இந்த சாம்பார் இருக்கும். இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார் மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் சிறிய குழந்தைகள் இருக்கும் வீட்டில் தவறாமல் இதனை செய்து விடுவார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சாம்பார் வகையை வெறும் தக்காளி, வெங்காயம், பருப்பு வைத்தும் செய்து விடலாம். அல்லது இவற்றுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். ஆனால் முதன்முறையாக தக்காளி, வெங்காயம் இல்லாமல் சுவையான சாம்பாரை இந்த பக்குவத்தில் செய்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

idli-sambar2

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 50 கிராம், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், தனியா – முக்கால் ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, கத்தரிக்காய் – 1, புளி – எலுமிச்சை பழ அளவு, மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் 50 கிராம் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து, இரண்டு முறை நன்றாகக் கழுவி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

carrot-juice1

குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட்டு 4 விசில் வரும் வரை துவரம்பருப்பை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை இறக்கி வைத்து, அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் ஸ்பூன் வெந்தயம், 4 காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

- Advertisement -

பின்னர் இரண்டு சில்லு தேங்காயை துருவி இவற்றுடன் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி இவற்றை ஒரு தட்டிற்க்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின் மறுபடியும் கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

sambar3

பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விடவேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி இவை நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான காய்கறி சாம்பார் தக்காளி, வெங்காயம் இல்லாமல் தயாராகிவிட்டது.

- Advertisement -