சமையலுக்கு தேவையான இந்த 10 குறிப்புகளும் உங்களுக்கு தெரியுமா? தெரியலன்னா தெரிஞ்சுக்கோங்க!

- Advertisement -

சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் ரொம்பவே உபயோகமாக இருக்கும். மேலும் சாதாரண சமையலைக் கூட ரொம்பவே வித்தியாசமான முறையில் மாற்றி அமைக்கக் கூடிய குறிப்புகள் தெரிந்து வைத்திருந்தால் நாமும் சமையல் கில்லாடி ஆகிவிடலாம். எல்லோரும் சமைக்கும் சமையலில் கொஞ்சம் வித்தியாசத்தை புகுத்துவது எப்படி? என்பதைத் தான் இந்தக் குறிப்புகளின் மூலம் காண இருக்கிறோம்.

குறிப்பு 1:
சீசன் சமயங்களில் தர்பூசணி வாங்குபவர்கள் அதன் மேல் தோலை நீக்கி விட்டு, உள்ளே தோல் பகுதிகளை மட்டும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் மிளகுத்தூள், உப்பு அல்லது மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கினால் ரொம்பவே வித்தியாசமான மணமுடன் வெள்ளரிக்காய் பொரியல் போல ருசியை கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
தேங்காயை துருவி 2 ஸ்பூன் அளவிற்கு துருவலை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் நல்லெண்ணையை காயவிட்டு இந்த தேங்காய் துருவலை வறுத்து தக்காளி சாதம், புளி சாதம், பட்டாணி சாதம் என்று எல்லா வகையான கலவை சாதங்களிலும் சேர்த்து கிளறினால் ரொம்பவே சூப்பராக இருக்கும். குறிப்பாக எலுமிச்சை சாதத்தில் கலந்தால் அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பு 3:
பஜ்ஜி போடும் பொழுது கடலை மாவு பயன்படுத்துவோம் ஆனால் அதற்கு பதிலாக ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி பச்சை பருப்பு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து உப்பு, காரம் சேர்த்து பஜ்ஜி போட்டால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
குடற்புண் ஆறுவதற்கு அடிக்கடி வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். அப்படி வாழைப்பூவை நீங்கள் பொரியல் செய்ய நறுக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து சேர்த்து வதக்கி சாப்பிட்டால் குடல் புண் விரைவில் ஆறும்.

குறிப்பு 5:
சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் என்று வத்தல் குழம்பு செய்யும் பொழுது அதனை அடுப்பிலிருந்து இறக்கியதும் கொஞ்சம் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் சேர்த்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு கோதுமையை மெஷினில் கொடுத்து அரைத்து வந்தவுடன் அதனை ஆற வைத்து கொஞ்சம் உப்பு போட்டு கலந்து வைத்து விட்டால் போதும் நீண்ட நாட்களுக்கு வண்டு வராமல் இருக்கும்.

குறிப்பு 7:
காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் எப்பொழுதும் பளிச்சென்று மின்னுவதற்கு கொஞ்சம் வினிகரையும், உப்பையும் சேர்த்து துணியால் அழுத்தித் துடைத்து தேய்த்தால் கொஞ்சம் கூட மங்காமல் பளிச்சென மின்னும்.

குறிப்பு 8:
இட்லிக்கு சாம்பார் செய்யும் பொழுது கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி விதை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து சாம்பாருடன் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

குறிப்பு 9:
நாள்பட்ட மிக்ஸி திடீரென சரியாக அரைக்காமல் போய்விட்டால் அதனுடைய பிளேடை கழட்டி மாட்டுவீர்கள், நீங்கள் அப்படி மாட்டும் போது பிளேடை கழற்ற முடியவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீரை ஊற்றி ஊற விடுங்கள், அதன் பின்பு கழற்றிப் பார்த்தால் ரொம்பவே சுலபமாக கழற்றி விடலாம்.

குறிப்பு 10:
அடிக்கடி உருளைக்கிழங்கு வறுவல் செய்பவர்களுக்கு ஒரு சூப்பர் குறிப்பு! புளிக்காத கெட்டி தயிர் அரை டீஸ்பூன் அளவிற்கு வறுவலுடன் சேர்த்து செய்து பாருங்கள், ரொம்பவே சூப்பராக சுவை தரும்.

- Advertisement -