அச்சசோ இத கவனிக்காம விட்டுட்டோமே, இனி இப்படி சொல்ல வாய்ப்பே இல்ல. இந்த கிச்சன் டிப்ஸ்ஸை நீங்க பாலோவ் பண்ணும் போது. வாங்க அது என்னன்னு பாக்கலாம்.

- Advertisement -

நம் வீட்டில் சமையல் செய்வது, சமையல் அறையில் உள்ள பொருட்களை ஒதுங்க வைத்து, பாதுகாப்பது, கெடாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பது இப்படி எல்லாமே பார்த்து பார்த்து தான் நாம் செய்வோம் இருந்தாலும் நம்மையும் மீறி சில நேரங்களில் ஏதாவது ஒன்றில் கவனக் குறைவாக இருந்து பொருட்களை வீணாகும் நிலை ஏற்பட்டு விடும். அப்படி இனி நீங்கள் வாங்கும் எந்த ஒரு சின்ன பொருள் கூட வீணாகி தூக்கி போடாத அளவிற்கு சமையலறையில் முக்கியமான குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது. இது நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காப்பித்தூள் கெட்டி ஆகாமல் இருக்க அதை கொட்டி வைக்கும் பாட்டிலில் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து விட்டு, அதன் மேல் காபித்தூளை கொட்டி வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டி ஆகாது. அதே போல சர்க்கரை, உப்பு, பருப்பு இவைகளை நாம் அதிக அளவில் வாங்கி வைக்கும் போது அதை கொட்டி வைக்கும் டப்பாவிலும் லேயர் லேயராக இந்த டிஷ்யூ பேப்பரை வைக்கலாம். அதாவது முதலில் டிஷ்யூ பேப்பர் அடுத்து கொஞ்சம் சர்க்கரை அதன் பிறகு டிஷ்யூ பேப்பர் அதன் மேல் சர்க்கரை இப்படி வைக்கும் போது உப்பு, சர்க்கரையில் தண்ணீர் விட்டு அது போகாது. பருப்புகளிலும் பூச்சி போன்றவை வராது.

- Advertisement -

சில நேரங்களில் லைட்டர் பற்ற வைக்கும் போது உடனடியாக எரியாது அதில் தண்ணீர் சேர்ந்திருந்தாலும் இது போல வருமா எனவே லைட்டரை எப்போதும் ஸ்டவ் ஆஃப் பண்ண பிறகு பர்னர் மீது வைத்து விடுங்கள் அந்த சூட்டில் ஈரம் இருந்தாலும் காய்ந்து விடும்.இப்படி பயன்படுத்தும் போது உங்களுக்கு கேஸ் வீண்ணாகாது.

தக்காளி வாங்கி வைக்கும் போது எப்படி தான் பார்த்து பார்த்து வைத்தாலும் ஒன்று இரண்டாவது அழுகிப்போய் விடும் அது மட்டும் இன்றி வெளியே வைக்கும் போது அதில் சின்ன, சின்ன கொசுக்கள் தக்காளியில் மொய்க்க ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க சிறிது நல்லெண்ணையை தக்காளி மேல் தேய்த்து வைத்து விடுங்கள். உடைத்த தேங்காய் பிரிட்ஜில் வைக்கும் போது அதன் மேல் எல்லாம் காய்ந்து தேங்காய் வீணாகும். இனி தேங்காய் கொஞ்சம் கூட வீணாகாமல் இருக்க அதன் மேல் எலுமிச்சை சாறு தேய்த்து வைத்து விடுங்கள் போதும்.

- Advertisement -

நெய் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் கொஞ்சம் வெந்தயம் போட்டு வைத்து விடுங்கள். நெய்யின் மனமும் நிறமும் மாறாமல் அப்படியே இருக்கும். பூண்டுகள் அதிக அளவில் உரித்து வைக்கும் போது ஒன்று சுருங்கிவிடும், இல்லை பழுப்பு நிறமாக மாறிவிடும் இப்படி ஆகாமல் இருக்க உரித்த பூண்டை கண்ணாடி பாட்டில் சேர்த்து பிறகு அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வைத்து விடுங்கள். பூண்டின் நிறமும் மாறாது சுவையும் அப்படியே இருக்கும்.

துணிகளில் படிந்த எண்ணெய் கறை போக கறை படிந்த இடத்தில் கொஞ்சம் காம்போர்ட் போட்டு அதன் மேல் லிக்விட் வைத்து தேய்த்தால் எண்ணெய் கறை உடனடியாக மறைந்து விடும். துணியும் சாயம் போகாது.

- Advertisement -

இட்லி வேக வைக்கும் போது மூடியிலிருந்து தண்ணீர் வடிந்து இட்லியில் தண்ணீர் சேர்ந்து இட்லி கொஞ்சம் சொத சொதவென்று ஆகிவிடும். அப்படி ஆகாமல் இருக்க இட்லி பாத்திரம் மூடும் போது ஒரு காட்டன் துணியை முதலில் வைத்து பிறகு மூடினால் தண்ணீர் இட்லி பானைக்குள் இறங்காது.

ginger-garlic-paste2

இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது தண்ணீருக்கு பதில் கொஞ்சம் எண்ணெய், உப்பு, இரண்டையும் சேர்த்து அரைத்தால் நீண்ட நாள் கேட்டு போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இப்படி மட்டும் நீங்கள் செய்தால் கொஞ்சம் கூட சிரமப்படாமல் கொஞ்ச நேரத்தில் மூட்டை மூட்டையாக துணி இருந்தாலும் துவைத்து விடலாமே! துணி துவைக்க சோம்பல் படுபவர்களுக்கு பயனுள்ள டிப்ஸ்.

இந்த குறிப்புகள் அனைத்தும் உங்கள் சமையலறையில் தினம் தினம் பயன்பட கூடியவை தான். இதை தெரிந்து கொண்டு உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

- Advertisement -