தினமும் காலையில் சமையல் அறைக்குள் சென்றதும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செஞ்சுடுங்க. உங்க வீட்டிற்குள் கடனும் வராது! கஷ்டமும் வராது!

kitchen-cash
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த கடன் நுழைந்து விட்டால், வீட்டில் இருக்கும் நிம்மதி வெளியே சென்றுவிடும். கஷ்டம் நம் வீட்டிற்குள் நிரந்தரமாக வந்து தங்கி விடும். வாங்கிய கடனை அடைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் எத்தனையோ பரிகார முறைகள் இருக்கிறது. ஆனால் அந்த கடனை நம்முடைய வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு உங்களுடைய வீட்டில் இதை மட்டும் பின்பற்றி வாருங்கள் போதும். அந்த குடும்பத்திற்கு கடன் பிரச்சனையே வராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அந்த குடும்பம் செல்லாது. குடும்பம் செல்வ செழிப்போடு தான் இருக்கும்.

women7

எந்த வீட்டில் இரவில் பெண்கள் சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு தூங்க செல்கிறார்களோ அந்த வீட்டிற்குள் கஷ்டம் வராது, கடனும் வராது. இது நிதர்சனமான உண்மை. காலையில் எழுந்தவுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறைக்கு செல்லும் போது சமையல் அறை சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களின் மனது புத்துணர்ச்சியாக இருக்கும்.

- Advertisement -

பெண்களின் மனது புத்துணர்ச்சியாக இருந்தால்தான் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். காலையிலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் மூட் அவுட் ஆக இருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுடைய நிலைமையும் இதேதான். பெண்கள் காலை வேளையில் புத்துணர்ச்சியாக இருக்க ஒரே வழி இரவு சமையலறையை சுத்தம் செய்து வைப்பது.

women4

நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் நாட்களில் பல் தேய்த்து, விட்டு முகத்தை அலம்பிவிட்டு குளிக்காமல் சமையல் அறைக்குள் போய் சமையலை தொடங்கலாம். சுத்தபத்தமாக இல்லை எனும் பட்சத்தில் கட்டாயமாக குளித்துவிட்டு தான் சமயலறைக்கு செல்ல வேண்டும் என்பது நியதி.

- Advertisement -

சமையலறைக்குள் சென்றவுடன் உங்களுடைய சமையல் மேடை, சமையல் செய்யும் அடுப்பை துடைத்துவிட்டு, அந்த அடுப்பை இரண்டு கைகளாலும் தொட்டு உங்களுடைய கண்ணில் ஒற்றிக் கொண்டு, அந்த கேஸ் ஸ்டவுக்கு ஒரே ஒரு மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும். குல தெய்வத்தை இஷ்ட தெய்வத்தையும் அன்னபூரணி தாயாரையும் வேண்டிக் கொண்டு, வீடு எப்போதும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு.

cooking-vilakku

அதன் பின்பு உங்களுடைய சமையல் வேலையை தொடங்கு வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், எல்லோரும் விரும்பி உங்களுடைய சமையலை சாப்பிட வேண்டும் என்று நினைத்து உங்களுடைய சமையலை நீங்கள் தொடங்குங்கள். கஷ்டப்பட்டு சமைக்காதீங்க இஷ்டப்பட்டு சமையுங்கள். (சமையல் அறையிலேயே மஞ்சள் குங்குமத்தை அடுப்பிற்கு இடுவதற்கு தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.)

kadan

தினசரி ஒரு பெண் தன் வீட்டு சமையலறையில் மேல் சொன்ன விஷயங்களை மனப்பூர்வமாக நம்பிக்கையோடு செய்தால், நிச்சயமாக அந்த வீட்டிற்குள் கடன் என்று மூன்று வார்த்தை நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. சமையலுக்கும் காசு பணத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நிறையபேர் நினைக்கலாம். ஆனால் ஒரு வீட்டில் இருக்கும் பெண் தன் வீட்டு சமையல் அறையை எப்படி கவனித்துக் கொள்கிறாள் என்பது தான் அந்த குடும்ப உறுப்பினர்களினுடைய வாழ்க்கையே அடங்கி உள்ளது.

kitchen

எந்த ஒரு பெண் தன் வீட்டு சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து, பராமரித்து வருகின்றாளோ, அந்த வீட்டில் தரித்திரம் பிடிக்காது. கடன் இருக்காது. சந்தோஷம் மட்டுமே இருக்கும். இது நிதர்சனமான உண்மை. உங்களுடைய வீட்டில் 48 நாட்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் தெரியும். உங்களுடைய வீட்டில் கடன் இருந்தாலும் அந்தக் கடனை அடைப்பதற்கு நல்லதொரு தீர்வை அந்த ஆண்டவன் உங்களுக்கு காண்பித்து கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -