இந்த தவறை செய்யும் பெண்கள் வீட்டில் மகாலட்சுமி நிலைத்து தங்கவே மாட்டாள். குடும்பம் செழிக்க பெண்கள் தினமும் சந்தனத்தை இப்படித்தான் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

sandhanam
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி நிலையாக தங்க வேண்டும் என்றால் பெண்கள் எந்த தவறை செய்யவே கூடாது, அதே சமயம் குடும்பம் சீரும் சிறப்புமோடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் பெண்கள் நெற்றியில் சந்தன திலகத்தை எப்படி இட்டுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் ஆன்மீகம் சார்ந்த ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த இரண்டு விஷயங்களை பின்பற்றி வரும்போது உங்களுடைய குடும்பம் பல தலைமுறைக்கு வாழ்வாங்கு வாழும். அதை வாழ வைத்த பெருமை பெண்களான உங்களை வந்து சேரும்.

அதாவது வீட்டு பெண்கள் சரியாக இருந்தால் மட்டும்தான், ஒரு குடும்பத்தால் தலையெடுக்க முடியும். வீட்டு பெண்கள் கையில் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமே அடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆகவே பெண்கள் இந்த குறிப்புகளை தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களும் இதை பின்பற்றலாம் தவறு கிடையாது.

- Advertisement -

குடும்பம் முன்னேற பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:
குடும்பத்தின் முன்னேற்றம் தடைபட என்ன காரணம் தெரியுமா. பெண்களின் முன் கோபம் தான். எந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொசுக்கென்று முன்கோபம் வருகிறதோ, அந்த வீட்டில் நல்லது என்பதே நடக்காது.

நல்லதை எல்லாம் இந்த முன்கோபம் அழித்துவிடும். அப்போ ஆண்களுக்கு கோபம் வரலாமா. ஆண்களின் கோபத்தை விட்டு விடுங்கள். ஐந்து நிமிடத்தில் அது சரியாகிவிடும். ஆனால் அதே கோபம் பெண்களின் ஆழ் மனதில் தங்கி பல பிரச்சனைகளை உண்டு பண்ணி விடும். ஆகவே பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கோபத்தை குறைக்கவே முடியவில்லை என்னதான் செய்வது. மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்யுங்கள். கோபத்தின் போது தியானம் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். சரி, இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். சுத்தமான சந்தன பொடி வாங்கிக் கொள்ளுங்கள். சந்தன மரத்திலிருந்து எடுத்த பொடியாக இருக்கட்டும். அதோடு கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, மணக்கும் ஜவ்வாது சிறிதளவு, துளசி பொடி சிறிதளவு, சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதை பூஜையறையில் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து அந்த மகாலட்சுமியின் சொரூபம் எனக்கும் கிடைக்க வேண்டும், எங்கள் குடும்பம் என்றென்றும் சீரும் செழிப்போடும் வாழ வேண்டும், என்று பெண்கள் வேண்டிக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் அமைதி உங்களிடம் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு தயார் செய்த இந்த சந்தன பொடியில் இருந்து சிறிதளவு எடுத்து தண்ணீர் அல்லது பன்னீரை ஊற்றி குழைத்து நெற்றியில் இட்டு வர உங்களுடைய முன்கோபம் படிப்படியாக குறைய தொடங்கும். கோபப்படும். ஆண்களும் இதை வைத்துக் கொள்ளலாம். கோபப்படும் குழந்தைகளும் இதை வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இந்த சின்ன எளிமையான பரிகாரம் பெண்களிடத்தில் மகாலட்சுமி அம்சத்தை உண்டு பண்ணிவிடும்.

இதையும் படிக்கலாமே: கடனை அடைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதா? அப்படியானால் சனிக்கிழமை மாலை இதை மறக்காமல் செய்து விடுங்கள். கழுத்தை நெரிக்கும் கடன் கூட காணாமல் போய் விடும்.

பரிகாரம் இவ்வளவு தான். நிறைய பெண்களுக்கு இந்த பதிவை படிக்கும் போதே கோபம் வரும். ஏன் பெண்களுக்கு கோபமே வரக்கூடாதா என்று.‌ நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள் இதிகாசங்கள் முதற்கொண்டு ஒரு பெண் கோபப்பட்டால் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்பதை நாம் பார்த்திருப்போம். உதாரணத்திற்கு நீங்கள் கண்ணகியை கூட எடுத்துக் கொள்ளலாம். முன்கோபம் நிச்சயமாக முன்னேற்றத்தை தடைப்படுத்தும் என்பதுதான் உண்மை. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் குடும்பம் நிச்சயம் சீரும் சிறப்புமோடு வாழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -