சனி பகவானால் நல்லது மட்டுமே நடக்க உதவும் சனி பரிகாரம்

sani pariharam in tamil
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனி கிரகத்திற்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் சனி கிரகத்தால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் அந்த கிரக காலத்தில் ஏற்படுகின்ற பாதகமான பலன்கள் ஒரு நபரை உடலளவிலும் மனதள விழும் மிகவும் சோர்வடையச் செய்துவிடுவதால் தான். ஆக சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அந்த சனி கிரகத்தால் நம் வாழ்வில் நன்மைகள் மட்டுமே ஏற்பட செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி பரிகாரம்

மலை மீது இருக்கின்ற அனுமன் கோயிலுக்கு சனிக்கிழமை அன்று சென்று, மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அத்தோடு அந்த மலைகளில் இருக்கின்ற குரங்குகளுக்கு பழங்கள் போன்றவற்றை உணவாக கொடுப்பதால் அனுமனின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று உங்கள் ஜாதகத்தில் சனீஸ்வர பகவானின் பாதகமான தாக்கம் குறைந்து நற்பலன்கள் ஏற்படும். அதேபோன்று தினந்தோறும் காகங்களுக்கு தவறாமல் உணவு வைக்கும் வழக்கத்தை மேற்கொள்வதாலும் சனிபகவானின் நல்லாசிகளை பெற முடியும்.

- Advertisement -

உங்கள் ஜாதகத்தில் சனி பாதகமான நிலையில் இருந்தாலும் அல்லது உங்களுக்கு சனி திசை, சனி புக்தி போன்றவை நடையில் பெற்றுக் கொண்டிருந்தாலும், உங்கள் சட்டைப் பையில் சிறிய அளவில் ஒரு வெள்ளி தகடு ஒன்றை எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். இது சனி கிரக தாக்கங்கள் உங்களுக்கு பாதகங்களை ஏற்படாமல் காக்கும் கவசமாக செயல்படும். உங்களால் இயன்றபொழுது 10 எண்ணிக்கையால் பார்வையற்ற நபர்களுக்கு அன்னதானம் செய்வதும் சனி கிரகத்தின் பாதகமான விளைவுகளை குறைத்து நன்மையை உண்டாக்கும்.

உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு தொடர்ந்து 40 நாட்கள் கால்களில் சிறப்புகள் அணியாமல் சென்று இருக்கின்ற சிவபெருமானையும், அம்பாளையும் நவக்கிரக சன்னிதியில் வழிபாடு செய்து வர வேண்டும். அதேபோன்று அகோவிலில் பாம்பு புற்றிருந்தால், அந்த புற்றிற்கு சிறிது காய்ச்சாத பசும்பாலை ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்வதால் ஜாதகத்தில் சனி கிரகம் பாதகமான அமைப்பில் இருந்தாலும் நமக்கு தீமைகளை செய்யாது.

- Advertisement -

ஜாதகத்தில் அஷ்டம சனி ஏழரை சனி போன்ற சனி கிரக சாரம் நடைபெற்றாலோ அல்லது சனி திசை சனி புத்தி நடைபெற்றாலோ காலங்களில் தினந்தோறும் அந்த ஜாதகர்கள் தங்களின் நெற்றியில் பசுந்தயிர் அல்லது பசும்பாலை சிறிது தொட்டு அதை திலகமாக வைத்துக் கொண்டு வெளியில் செல்ல வேண்டும். சனிக்கிழமைகளில் எருமை மாடுகளுக்கு அரிசியால் செய்யப்பட்ட உணவை உண்ணக் கொடுப்பதாலும் சனி கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கண் திரிஷ்டி பரிகாரம்

ஜாதகத்தில் பாதகமான நிலையில் சனி கிரகம் அமையப்பெற்ற நபர்கள் தாங்கள் வசிக்கப் போகும் புதிய வீட்டை தெற்கு திசையை பார்த்தவாறு அமைக்க கூடாது. அதேபோன்று வாடகை வீட்டில் இருக்கின்ற மேற் சொன்ன ஜாதக அமைப்பு கொண்ட நபர்கள் தெற்கத்திசையை நோக்கி வாசல் கொண்ட வீட்டில் வசிக்க கூடாது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கிய நிலை வாசல் கொண்ட வீடுகளில் வசிப்பதால் சனி கிரகத்தின் தாக்கம் குறைந்து வாழ்வில் சிரமத்தை குறைக்கும்.

- Advertisement -