ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

sani bhagavan vinayagar sangu
- Advertisement -

கிரகங்களிலே நீதிபாகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான் நம் வாழ்க்கையில் சகலத்துக்கும் காரணமாக அமைகிறது. ஒருவர் தன்னுடைய கடமையை செய்ய நேர்மை வழியில் இருந்து தவறும் போது அவருக்கான பிரதிபலனாக சனி ஆனவர் தண்டனை கொடுப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான அச்சம் ஏற்படும்.

தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்று வரும் போது கொஞ்சம் நடுங்கித் தான் போவார்கள். அந்த அளவிற்கு சனி பகவான் நம்முடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக் கூடியவர். அப்படியான சனி பகவானின் அதீத தாக்கமான ஏழரை சனியினால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பரிகாரங்களை கடைபிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதை என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சனியின் தாக்கம் குறைய

ஒரு ராசியில் பன்னிரண்டாம் இடம் ஒன்றாம், இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருந்தால் அதை ஏழரை சனி என்பார்கள். ஒருவருக்கு ஏழரை சனி ஆனது ஆரம்பித்து விட்டால் எந்த வேலையும் சீக்கிரத்தில் முடியாது. குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் நிச்சயமாக அவர் கெட்ட பெயர் உண்டாகும். பணியிடங்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பளம் கிடைக்காது

தொழில் செய்பவர்களுக்கு அதில் நஷ்டங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதால் பணத்திற்கு திண்டாட கூடிய சூழ்நிலை உருவாகும். சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் பெரும் கடலில் சிக்கிக் கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கும். பெரும்பாலும் இந்த காலக் கட்டத்தில் இவர்கள் சோம்பேறி தொடர்பாகவே இருப்பார்கள்.

- Advertisement -

இந்த தாக்கத்திலிருந்து குறைய அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் முழு முதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபாடு செய்த இவருடைய கெடுப்பலன்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் அதே போல் சனி பகவானுக்கும் பைரவருக்கும் அவரவர்களுக்கு உகந்த நாள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

தினமும் காலையில் குளித்து விட்டு காக்கைக்கு எச்சில் படாத சாதத்தில் எள் கலந்து வைக்க வேண்டும். அது மட்டும் இன்றி குலதெய்வ வழிபாட்டை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மகாவிஷ்வின் அம்சமான வலம்புரி சங்கை வைத்து வழிபடுவது நல்ல பலனை தரும். அது துளசி மாலை ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை சனி பகவான் தாக்குவதில்லை என்று சொல்லப்படுகிறது ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அணிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பொதுவாக இந்த காலக்கட்டத்தில் பொன்னாசை மன்னாசை போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். அமங்கலமான வார்த்தைகள் கெட்ட சிந்தனைகள் கெட்ட செயல்கள் போன்றவற்றை செய்வதை அறவே நிறுத்தி விட வேண்டும். கெட்ட எண்ணத்துடன் பிறர் மீது பொறாமை கொண்டு தீய செயல்கள் செய்வதை எல்லாம் தவிர்த்து விடுவது நல்லது

இந்த தெய்வங்களின் வழிபாட்டோடு சனிபகவானுக்கே உரிய கோவில்களான திருநள்ளாறு திருக்கொள்ளிக்கோடு குற்றாலூர் போன்ற திருத்தலங்களுக்கு சென்று சனி பகவானை மனதார வேண்டி வரும் போது ஏழரை சனியின் தாக்கம் பெரும் அளவு குறைவு என்று சொல்ல படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர வாராகி வழிபாடு

ஏழரை சனியின் இந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள என்னென்ன பரிகாரங்கள் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தகவலில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை பின்பற்றி பலன் அடையலாம்

- Advertisement -