சந்தோஷமாக வாழ முருகன் வழிபாடு

murugan2
- Advertisement -

ஓடி ஓடி சம்பாதித்து உழைத்து கஷ்டப்படுவது எதற்காக. வாழ்க்கையை நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக. மனதில் நிம்மதி இல்லை, வாழக்கூடிய வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்றால், கட்டு கட்டாக பணத்தை சேர்த்தும் பிரயோஜனமே இருக்காது. உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா. ஒரு நாள் கூட சந்தோஷமாக சிரிக்க முடியவில்லையா.

இந்த ஆன்மீகம் சொல்லும் முருகன் வழிபாடு உங்களுக்காக மட்டும் தான். இதை செய்தால் மன கஷ்டத்தோடு இருப்பவர்களுக்கு பணக்கஷ்டமும் தீரும். வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பெற அந்த முருகப்பெருமானுக்கு எப்படி விளக்கு போடணும். ஆன்மீகம்” சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முன்பாகவே ஒரு முருகன் கோவிலுக்கு போய்டுங்க. காலை 6 மணிக்கு முன்பாக முருகன் கோவிலில் நீங்க இருக்கணும். முருகப்பெருமான் சன்னிதானத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். முருகப் பெருமானை நோக்கி அந்த விளக்கு எரியட்டும்.

இந்த தீபச்சுடரை பார்த்தவாறு முருகனுக்கு முன்பாக நீங்களும் அமர்ந்து கொள்ள வேண்டும். முருகப்பெருமானை பார்த்து உங்களுடைய கோரிக்கையை வையுங்கள். உங்களை நிம்மதியாக வாழ விடாமல் எந்த பிரச்சனை கஷ்டத்தை கொடுக்கிறது. அந்த ஒரு கோரிக்கையை மட்டும் நினைத்து , ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்ல தொடங்கி விடுங்கள்.

- Advertisement -

ஒரு மணி நேரம் மனம் உருகி மனசுக்குள் ஓம் சரவணபவ மந்திரத்தை சொல்லி தியான நிலையில் இருங்கள். நீங்கள் வேண்டுதலை முடிக்கும் வரை உங்களுடைய விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அதில் நெய் தீருவது போல இருந்தால் கையில் கொஞ்சம் அதிகமாக நெய் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். அந்த நெய்யை அந்த அகல் விளக்கில் ஊற்றிக் கொள்ளலாம் ஊற்றிக் கொள்ளலாம்.

இந்த ஒரு மணி நேர வழிபாடு உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் அத்தனை பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். காலை 6 மணிக்கு முன்பாக கோவிலுக்கு போறீங்க. இந்த வழிபாடு செய்து முடிக்க 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் பரவாயில்லை. அதில் எந்த தவறும் கிடையாது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முன்பாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்பவர்கள், மாலை 6 மணிக்கு மேல் முருகன் சன்னிதானத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

வருடத்தில் இரண்டு நாள் ஏதாவது ஒரு செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் முருகப்பெருமானுக்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்ய முடியாது. முருக பெருமானுக்கு பக்கவாட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சில கோவில்களில் கோவிலுக்கு முன்பாக அமர அனுமதி பெற முடியாது. இப்படிப்பட்ட கண்டிஷனுக்கெல்லாம் எந்த கோவிலில் ஓகே சொல்றாங்களோ அந்த கோவிலா பார்த்து தேர்ந்தெடுக்கணும். முருகப்பெருமானுக்கு முன்பாகத்தான் இந்த விளக்கு எரிய வேண்டும். முருகனுக்கு முன்பாகத்தான் நீங்கள் அமர வேண்டும். இன்னும் ஒரு முக்கிய முக்கியமான விஷயம்.

முருகர் வள்ளி தேவையானயோடு இருக்கக்கூடிய முருகன் கோவிலில் இந்த வழிபாட்டை செய்தால் பலன் உங்களுக்கு மேலும் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நன்மை தரக்கூடிய இந்த வழிபாட்டை வாராவாரம் செவ்வாய்க்கிழமை செய்யலாமா. கூடாது, வருடத்தில் இரண்டு நாள் மட்டுமே இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: கடனை கரைக்கும் கல்கண்டு பரிகாரம்.

ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் காற்றோடு காற்றாகப் போனதை நிச்சயம் உணர்வீர்கள்.

- Advertisement -