இப்படி ஒரு முறை இட்லிக்கு சாம்பார் வைத்து கொடுங்கள். எப்போதும் சாப்பிடும் சுவையை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த சாம்பாரின் சுவைக்கு 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

idli-sambar
- Advertisement -

காலை, மாலை உணவாக இட்லி, தோசையை தான் அதிகமாக செய்கின்றோம். இந்த உணவுகளுடன் தொட்டுக்கொள்ள தினம் தினம் விதவிதமாக சைடிஷ் செய்ய வேண்டிய அவசியம் உண்டாகும். ஆனால் தொடர்ந்து சட்னி செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சளிப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு தேங்காயை உணவில் சேர்ப்பது அஜீரண கோளாறை உண்டு செய்யும். எனவே அதிகமாக பலரது வீடுகளிலும் செய்வது சாம்பார் தான். ஆனால் இந்த சாம்பாரையும் ஒரே விதமான சுவையில் செய்தால் அதுவும் அளுப்பாகத் தான் இருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள ஒரு சிறிய ரகசிய குறிப்பை பயன்படுத்தி சாம்பாரின் சுவையை இன்னும் அதிகப்படுத்த முடியும். வீட்டிலுள்ளவர்கள் வழக்கத்தை விடவும் அதிக அளவு இட்லியை சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சாம்பாரின் ரகசியத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

rava-idli1

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – ஒரு டம்ளர், வெங்காயம் – 2, தக்காளி – 4, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 2 சில்லு, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 6, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து இரண்டு, மூன்று முறை தண்ணீரில் கழுவி, பின்னர் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், 6 பல் பூண்டு, பச்சை மிளகாய், 2 வெங்காயம் மற்றும் மூன்று தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து கொண்டு அனைத்தையும் பருப்புடன் சேர்த்து மூடி போட்டு 4 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

thuvaram-paruppu

பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து, மத்து வைத்து, பருப்பினை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் கரைத்து, அந்த புளி தண்ணீரை கடாயில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

மிளகாய் தூள் வாசனை சென்றதும் கடைந்து வைத்துள்ள பருப்பை இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டு, அதனுடன் ஒரு தக்காளியை நான்காக அரிந்து சேர்க்க வேண்டும்.

idli-sambar1

இதனை பேஸ்ட்டாக அரைத்து சாம்பாருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்து விடவேண்டும். இறுதியாக சேர்த்த இந்த தேங்காய் கலவை சாம்பாரின் சுவையே மிகவும் அதிகப்படுத்தி சாப்பிடும் அனைவரையும் சற்று அதிகமாகவே சாப்பிடத் தூண்டும்.

- Advertisement -