சமையலறையில் அடிப்படையாக இந்த குறிப்புகளை எல்லாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் பெண்மணிக்கு 10 பயனுள்ள சமையல் குறிப்புகள்.

kitchen1
- Advertisement -

அட சமையல் அறையில் இப்படி கூட எல்லாம் குறிப்புகள் உள்ளதா, என்று நமக்கு தெரியாத புத்தம்புதிய குறிப்புகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்மார்ட்டாக சமைப்பவர்களுக்கு, ஸ்மார்ட்டான இந்த சின்ன சின்ன டிப்ஸ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். பின் சொல்லக்கூடிய குறிப்புகளை படித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எப்போது தேவைப்படுகிறதோ அப்போது பயன்படுத்தி பலன் பெறலாம். இதோ உங்களுக்காக பயனுள்ள 10 குறிப்புகள்.

சமையலறை என்றாலே எறும்பு தொந்தரவு அதிகமாக இருக்கும். சிறிது மூக்குப் பொடியை எடுத்து தண்ணீரில் கரைத்து, அந்தத் தண்ணீரை சமையலறையில் மூலைமுடுக்குகளில் தெளித்து விட்டால், எறும்புகள் வராமல் இருக்கும். எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை தெளித்து விட்டால் எறும்புப் புற்று இருக்கும் இடம் காணாமல் போகும்.

- Advertisement -

வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்து அந்த தண்ணீரை தொட்டு மரக் கதவுகளை துடைத்தால் அது பளிச்சிடும். குறிப்பாக சமையலறையில் எண்ணெய் பிசுக்கு இருக்கும் கபோர்டு ஜன்னல்களை இப்படி துடைத்துப் பாருங்கள்.

வாழைப்பூவை சமைக்கும்போது அதில் லேசாக துவர்ப்பு சுவை இருக்குமல்லவா. அரிசி களைந்த தண்ணீரில் சிறிது மோர் கலந்து அந்தத் தண்ணீரில் சுத்தம் செய்த வாழைப்பூவை சிறிது நேரம் போட்டு ஊறவைத்து அதன் பின்பு சமைத்தால் துவர்ப்பு சுவை இருக்காது.

- Advertisement -

தோசைக்கு அரிசி ஊற வைப்போம் அல்லவா. இட்லி அரிசி, அந்த 1 கிலோ இட்லி அரிசிக்கு, 50 கிராம் – வேர்க்கடலை, 50 – கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து தோசை மாவு அரைத்து அந்த மாவில் தோசை சுட்டால் தோசை மொறுமொறுப்பாகவும் அதிக சுவையாகவும் இருக்கும்.

ரொம்பவும் வாடிய காய்கறியின் மேல் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறை விடுங்கள். அந்த வாடிய காய்கறி உடனடியாக பிரஷ்ஷாக மாறிவிடும்.

- Advertisement -

பாகற்காயை பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும்போது இரண்டாக வெட்டி ஸ்டோர் செய்தால் சீக்கிரம் பழுத்து போகாமல் இருக்கும்.

மழைக்காலம் வந்தால் நம் வீட்டில் போட்டு வைத்திருக்கும் தாளிப்பு வடகம் பூசனம் பிடித்து போனது போல இருக்கும். அந்த ஈரப்பதமான வடகத்தை எடுத்து சூடான கடாயில் போட்டு லேசாக சூடு செய்து அந்த சூடு ஆறிய பின்பு திரும்பி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் அந்த வடகம் மொறுமொறுப்பாகவும் பூசணம் பிடிக்காமலும் இருக்கும்.

தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் இரண்டு கொத்து கொத்தமல்லி தழை, சிறிய துண்டு புளி வைத்து அரைத்து பாருங்கள். தேங்காய் சட்னியின் சுவை கூடுதலாக கிடைக்கும்.

குண்டூசி சேஃப்டி பின் இவைகளை பயன்படுத்தாமல் ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்திருந்தால் அது சீக்கிரம் துரு பிடிக்கும் அல்லவா. அதில் கொஞ்சமாக சாக்பீஸ் துளை போட்டு வையுங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் துரு பிடிக்கவே பிடிக்காது.

அசைவம் கழுவிவிட்டு நம்முடைய கையை முகர்ந்து பார்த்தால் நீச்ச வாடை வீசும். என்னதான் சோப்பு போட்டுக் கழுவினாலும் போகாது. எலுமிச்சை பழத் தோலை வைத்து உங்களுடைய கையைத் தேய்த்துக் கழுவினால் எப்படிப்பட்ட வாடையும் உடனடியாக நீங்கிவிடும்.

- Advertisement -