விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை.

vibudhi

நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. ஆன்மீகத்தில் அறிவியலை புகுத்துயத்தில் நம் முன்னோர்களுக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் நாம் தினமும் விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மைகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

saadhu

மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிழுக்கவும் செய்யும்.

நெற்றியின் வழியாக என்ன சக்தியை வெளியிடம் முடியும் என்று யோசிக்கவேண்டாம். இதற்கு மிக சிறந்த உதாரணம் சிவ பெருமானின் நெற்றிக்கண். அவரது நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படும் சக்தியை எதிர்கொள்ளும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

நெற்றி என்பது ஒரு வர்ம ஸாதனமும் கூட. ஆகையால் நெற்றியில் நாம் திருநீறு வைப்பதன் மூலம், சூரிய கதிர்களில் உள்ள சக்தியை இழுத்து அதை நெற்றி வழியாக உடம்பில் செலுத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்கிறது. இதன் மூலம் சூரிய கதிர்களில் உள்ள சக்தி நம் உடலிற்கு முழுமையாக கிடைக்கிறது. சாதாரண திருநீறில் என்ன ஒரு அறிவியல் பாருங்கள்.