தன தானியத்தை அள்ளித் தரும் தாந்திரீக பரிகாரங்கள். இந்த சூட்சமங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும் செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி

Perumal Dhaniyam
- Advertisement -

தன வசியம் உண்டாக நம்முடைய இந்து சாஸ்திரத்தில் நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒரு வீட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை அதில் மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டு இருக்கும் சில தாந்த்ரீக விஷயங்களையும் பரிகாரங்களையும் நாம் கடைப்பிடித்தாலே தன தானியத்திற்கு குறைவில்லாமல் செல்வ வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தன தானியம் வசியம் உண்டாக தாந்த்ரீக பரிகாரம்:
இதிலேயே தனம் என்ற சொல் முதலில் இருப்பதால் தன வசீயத்தையே முதலில் பார்ப்போம். பணம் வைக்கும் இடத்தில் எப்பொழுதும் வாசனை மிகுந்த மல்லி பூவினை வைத்தால் அங்கு பண விருட்சம் அதிகமாக இருக்கும். அதே போல் பெருமாள் கோவில்களில் அபிஷேகம் செய்த துளசியை நீங்கள் பணம், நகை வைக்கும் விதத்தில் வைத்தாலும் அது பன்மடங்கு விருத்தியாகும்.

- Advertisement -

வலம்புரி சங்கின் நாதம் கேட்கும் இடத்திலும், பிராமணர்களுக்கு நாம் முறையாக தானங்களை வழங்கினாலும் தோஷங்கள் நீங்கி பண விருத்தி அதிகரிக்கும் என்ற ஐதீகம் உண்டு. வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் மல்லி செடி, துளசி செடி, மரம் வைக்க இடம் இருந்தால் அங்கு நெல்லி மரம் போன்றவற்றை இருந்தால் அங்கே லட்சுமி கடாட்சம் பெருக் கெடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் வரும் அன்று பௌர்ணமியில் சுக்கிர ஹோரையில் வில்வம், துளசி, நாயுருவி, குப்பைமேனி போன்ற செடிகளின் வேர்களுக்கு முறையாக காப்பு கட்டி வழிபட்ட பின் அந்த வேரை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் அத்தனை தன வசியமும் நமக்கு உண்டாகும் என்று நம்பப்படுகிறது. இது சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம்.

- Advertisement -

நகம் முடி போன்றவை விழுந்த தண்ணீரை நாம் பருகவும் கூடாது. வேறு எந்த உபயோகத்திற்கும் அதை பயன்படுத்தக் கூடாது என்றும், அதே போல் கரையான் புற்று, எறும்பு புற்று போன்றவற்றையெல்லாம் கலைக்க கூடாது என்றும், அப்படி செய்தால் தோஷங்கள் உண்டாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

வீட்டில் பெண்கள் உணவு பரிமாறும் போது எச்சில் கையால் பரிமாறுவதோ அல்லது வளையல் அணியாமல் பரிமாறுவதோ, உப்பு நெய் போன்றவற்றை வெறும் கையால் எடுத்து வைப்பது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கு வைத்த பிறகு குப்பை அள்ளி வெளியில் வீசக் கூடாது.

வீட்டின் நிலை வாசலின் மேல் நற்பவி என்று எழுதி வைத்தால் அங்கு சகலவித சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி எப்போதும் நம் உடல், உள்ளம் இரண்டும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், உடலில் அணியும் ஆடை சுத்தமாகவும் எப்போதும் நல்ல நறுமணத்துடனும் இருந்தால் அங்கு சுக்கிர வசியம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த குறிப்பில் உள்ளவற்றை நாம் முறையாக பின்பற்றினாலே தனம் தானியம் நம் வசியமாகும் என்று சொல்லப்படுகிறது. இவையெல்லாம் நாம் காலம் காலமாக நம் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள முன்னோர்கள் பின்பற்றி வந்த சிறு சிறு தாந்த்ரீக பரிகாரங்கள் தான். இந்த பரிகாரங்களில் உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் உங்கள் வாழ்க்கையிலும் இதை கடைபிடித்து பயனடையுங்கள்.

- Advertisement -