இறந்தவர்களை இப்படி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

mahalakshmi god manjal
- Advertisement -

இறந்தவர்களை வழிபடும் முறை நம்முடைய பழக்கத்தில் உள்ளது. இது பெரும்பாலும் அமாவாசை திதிகளிலும், அவர்களுடைய பிறந்தநாள்களில் செய்வது தான் வழக்கம். அப்படி அல்லாமல் நம் வீட்டில் சுமங்கலி பெண்கள் இறந்து இருந்தால் அவர்கள் இப்படி வழிபடும் போது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இறந்த சுமங்கலி பெண்கள் வழிபாடு

பொதுவாக நம் வீட்டில் இறந்தவர்களுக்கென தனியாக படம் வைத்து விளக்கு ஏற்றி வைத்து தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதை தினந்தோறும் ஒரு சிலர் செய்வார்கள். ஒரு சில வீடுகளில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்கள், இறந்த தினங்களில் வழிபடுவார்கள் இது ஒவ்வொருவருக்கும் இந்த முறை மாறுப்படும்.

- Advertisement -

ஒரு சிலரோ இறந்தவர்களை தினமும் வழிப்பாடு செய்ய மாட்டார்கள். முக்கியமான தினத்தில் மட்டும் அவர்களுடைய படத்தை எடுத்து வைத்து வழிபட்ட பிறகு மறுபடியும் எடுத்து வைத்து விடுவார்கள். எது எப்படி இருப்பினும் நம் வீட்டில் இறந்த சுமங்கலி பெண்களை தினம் தினம் நாம் வழிபட வேண்டும் அதுவும் நாம் பூஜையறையிலேயே இந்த வழிபாடு செய்யலாம் என்றும் சொல்லப்பட்டுயிருக்கிறது.

இதுவும் உங்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். பெரும்பாலும் இறந்தவர்களின் புகைப்படத்தையோ இறந்தவர்களுக்கான எந்த ஒரு வழிபாட்டையும் நாம் பூஜை அறையில் செய்ய மாட்டோம். செய்யக் கூடாது என்பதுதான் நியதியும் கூட, ஆனால் நம் வீட்டில் இறந்த சுமங்கலிகளுக்கு இப்படி ஆன வழிபாட்டை பூஜை அறையில் செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

- Advertisement -

இதற்கு வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த வழிபாடு நம் இறந்தவர்களுக்கு செய்தாலும் நம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகவே செய்கிறோம். ஆகையால் இந்த நாட்கள் உகந்ததாக இருக்கும்.

இந்த நாட்களில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சுத்தமான மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் மஞ்சளை வாங்கி அரைத்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அந்த மஞ்சளை ஒரு தட்டில் வைத்து குழைத்து உருண்டையாக செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த உருண்டைக்கு பொட்டு வைத்து அந்த தட்டுடன் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அந்த உருண்டைக்கு முன்பாக ஒரே ஒரு அகல் விளக்கை மட்டும் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் சுவாமி படங்களுக்கு வைப்பது போல பூ வைத்து ஊதுபத்தி, தீபாராதனை காட்டி அந்த உருண்டையை உங்கள் வீட்டில் இறந்த சுமங்கலி பெண்களாக பாவித்து அவர்களிடம் உங்கள் குடும்பம் லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டை தினம் தினம் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிடும் போது, அதே போல இங்கும் ஒரு தீபம் ஏற்றி ஒரே ஒரு பூ வைத்து வழிபட்டால் போதும். இதற்கென வேறு எந்த சிறப்பு வழிபாடும் செய்ய வேண்டியது இல்லை. இந்த மஞ்சள் பூச்சி வைத்து விட்டால் எடுத்து செடிகளிடத்தில் போட்டு விட்டு, இதே போல வேறு மஞ்சள் செய்து வைத்து வழிபடுங்கள்.

இப்படி வணங்கும் பொழுது சுமங்கலி பெண்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுவதுமாக கிடைப்பதுடன், மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: சிவனடியார்களுக்கு உங்கள் கையால் இதை தானமாக கொடுத்தால் வியாபாரத்தில் நஷ்டமே வராது.

இந்த மஞ்சள் உருண்டை எத்தனை சுமங்கலி பெண்களை வழிபடுகிறீர்களோ அத்தனை உருண்டைகளை செய்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிலும் இது போல யாராவது சுமங்கலி பெண்கள் இறந்து இருந்தால் இந்த வழிபாட்டை செய்து அதன் மூலம் உங்கள் குடும்பம் மேலும் நல்ல நிலையை அடைய வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -