நினைத்தது யாவும் உடனே கிடைக்க இன்று அங்காரா சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி பூஜை செய்தால் போதும். இது ஓராண்டு நீங்கள் சதுர்த்தி விரதம் இருந்து பூஜை செய்ததற்கான பலன் கிடைக்கும்.

vinayagar dheepam
- Advertisement -

தெய்வங்களிலே முதன்மையான தெய்வமும் எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகரே. அவருக்கான மிக உகந்த விசேஷமான நாளெனில் அது விநாயகர் சதுர்த்தி தான். நேற்றைய தினம் அனைவரும் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக அவரவர் இல்லங்களில் கொண்டாடி இருப்பார்கள். இன்று இந்த அங்காரஹர சதுர்த்தி பூஜையை செய்ய வேண்டும்.

இந்த பூஜையை இன்று செய்வது மிக மிக உகந்தது ஏனெனில் செவ்வாய் கிழமையில் சதுர்த்தி வருவது அதிக பலன்களை கொடுக்கும். அதுவும் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த தினமும் சதுர்த்தி திதி இருப்பதால் இன்றைய தினம் விநாயகரை வழிபடும் பொழுது நீங்கள் கேட்ட வரம் யாவும் உடனே கிடைக்கும் என்பதோடு இந்த வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்து வழிபடுவதற்கான பலனை இந்த ஒரு நாளிலே பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அங்காரஹர சதுர்த்தி வழிபாடு
இன்றைய தினம் விநாயகரை இரண்டு முறைகளில் வழிபடலாம். ஒன்று அருகம்புல் வழிபாடு, மற்றொன்று செம்பருத்தி இலை பூஜை, இந்த இரண்டை பற்றியும் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம். முதலில் அருகம் புல்லை வைத்து வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த பூஜை செய்வதற்கு நீங்கள் விநாயகருக்கு ஏதாவது ஒரு நெய்வேதியம் செய்து வைத்து விடுங்கள். அடுத்து விநாயகருக்கு தீப தூப ஆராதனை காட்டி நான்கு திரி கொண்ட தீபம் ஏற்ற வேண்டும். அதுவும் தேங்காய் எண்ணெயில் ஏற்ற வேண்டும். அதற்கு இரண்டு அகலில் இரண்டு திரிகளை ஒன்றாக போட்டு தீபம் ஏற்றுங்கள். அடுத்து விநாயகருக்கு அருகம் புல்லில் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு 21 அருகம்புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் கிடைத்தால் நீங்கள் மாலையாக கட்டி போடலாம். இந்த 21 அருகம்புல்லையும் விநாயகருக்கு அவருடைய நாமங்களை, போற்றிகளை சொல்லி ஒவ்வொன்றாக வைத்து வணங்குங்கள்.

- Advertisement -

அடுத்து செம்பருத்தி இலை வழிபாடு. இது மிக மிக சக்தி வாய்ந்தது ஒரு வழிப்பாடாக சொல்லப்படுகிறது. இதற்கு 108 செம்பருத்தி இலைகள் தேவை. இந்த 108 செம்பருத்தி இலைகளிலும் ஓம் என்ற எழுத்தை மஞ்சளாய் நீங்கள் எழுத வேண்டும். அதற்கு நல்ல தரமான மஞ்சளை குழைத்து உங்கள் வலது கை மோதிர விரலால் மஞ்சளை எடுத்து செம்பருத்தி இலையில் ஓம் என்று எழுத வேண்டும். அந்த இலை நன்றாக காய்ந்த பிறகு இதே போல் ஒவ்வொரு இலையாக வைத்து அர்ச்சனை செய்யலாம் அல்லது விநாயகருக்கு மாலையாக கட்டியும் போடலாம்.

இதையும் படிக்கலாமே: மனதில் ஏதோ இனம் புரியாத பயம் இருக்கிறதா? தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஏதாவது தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா? துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபட்டு பாருங்கள் தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும்.

பொதுவாகவே விநாயகர் கேட்டதற்கு கேட்ட வரத்தை உடனே அருளக் கூடிய இளகிய மனம் கொண்ட தெய்வம். அவரை இன்றைய தினத்தில் இது போன்ற வழிபாடு அதாவது அவருக்கு மிகவும் பிடித்த இந்த இரண்டு பொருளால் வழிபாடு செய்யும் பொழுது நீங்கள் கேட்ட வரத்தை உடனே தந்து விடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளை தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டு விநாயகரின் அருள் ஆசி பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -