வீட்டில் லட்சுமி கடாக்ஷம் ஏற்பட வழிபாடு

selvam sera
- Advertisement -

பொதுவாக வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் லட்சுமி கடாட்சம் பெறுக வேண்டும் எனில் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்வோம் அல்லது விசேஷமான நாட்களை தேர்ந்தெடுப்போம். ஆனால் திங்கட்கிழமையில் நாம் செய்யும் இந்த ஒரு எளிமையான பூஜை நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை வர வைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அது குறித்தான ஒரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெறுக திங்கட்கிழமை வழிபாடு

இந்த வழிபாடு திங்கட்கிழமை தோறும் வார வாரம் தொடர்ந்து செய்யலாம். இப்படி செய்ய முடியாதவர்கள் மாதத்தில் ஒரு திங்கட்கிழமையாவது செய்யுங்கள். வீட்டில் நிச்சயம் செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய திங்கட்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் பெருமாள் மகாலட்சுமி தாயார் இவர்களின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய நாளில் அசைவத்தை தவிர்த்தல் நல்லது. அன்றைய பகல் பொழுதில் துளசி இலை பறித்து மாலையாக கட்டி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் மீண்டும் காலையில் ஏற்றிய அதே விளக்கில் நெய் ஊற்றி மகாலட்சுமி தாயார் அல்லது பெருமாள் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றுங்கள். இப்பொழுது நீங்கள் தொடுத்து வைத்த துளசி மாலையில் இந்த தெய்வங்களின் படங்களுக்கு போட்டு வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் வீட்டில் தெய்வீக பொருளான கோமதி சக்கரம், வலம்புரி சங்கு, சாளக்கிராமம், சோலி, சிப்பி இப்படி மகாலட்சுமி தாயார் பெருமாள் இவர்களுக்கு உரிய பொருள் வைத்து அவற்றிற்கும் துளசி இலையில் சிறிது வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு எளிமையான இனிப்பை செய்து வைத்து விடுங்கள்.

அதன் பிறகு எந்த பொருட்களுக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களிடம் எந்த தெய்வீக பொருளும் இல்லை என்றாலும் பரவாயில்லை இந்தப் படங்கள் மட்டும் இருந்தாலும் பக்தியுடன் வழிபாடு செய்யுங்கள் மகாலட்சுமி தாயார் நிச்சயம் உங்கள் வீடு தேடி வருவார்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பிரதோஷ வழிபாடு

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யும் பொழுது உங்கள் வீடு என்றென்றைக்கும் லட்சுமி கடாட்சத்துடன் இருப்பதுடன் சிவபெருமானுக்கு உகந்த சோம வாரத் திங்கட்கிழமையில் இதை செய்யும் பொழுது சிவனின் அருளும் சேர்த்து கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -