உங்களிடம் செல்வம் சேராமல் போக நீங்கள் அறியாமல் செய்யும் இந்த 4 தவறுகளும் காரணமாக இருக்கலாம் தெரியுமா?

எல்லோரிடமும் செல்வம் மிகுதியாக சேர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் இடத்தில் மட்டும் செல்வ வளம் அதிகமாக நிறைந்து இருக்கும். அப்படி என்றால் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! நாம் மட்டும் பாவம் செய்தவர்களா? என்கிற கேள்வி எல்லோருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் எழுந்திருக்கும். ஒரு மனிதன் செய்யும் புண்ணியம், பாவம் இரண்டுமே கர்மாக்களாக தொடர்கின்றன என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆக பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் தான் அவனுடைய மறுபிறப்பு இருக்கும் என்பது நியதி.

eman

அக்கர்மவினையை நீக்குவதன் மூலமாக மட்டுமே இப்பிறவியிலும் செல்வ செழிப்புடன் வாழ முடியும். அதற்கு நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி நடத்தி செல்கிறோம்? என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் அடிப்படையில் நாம் செய்யும் இந்த 4 தவறுகள் செல்வ வளத்தை தடை செய்கின்றன. அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவருடைய வீட்டில் செல்வவளம் தடையில்லாமல் பெருக, கடன் இல்லாமல் வாழ இறைவழிபாடு என்பது முக்கியமாகும். இறைவனை வணங்காதவர்கள் நன்றாக தானே இருக்கிறார்கள்? என்று விதண்டாவாத கேள்வி எழுப்பலாம். நல்ல கர்மாக்களை கொண்டுள்ளவர்கள் இறைவனை மனதால் தியானிகிறார்கள். அவர்களுக்கு தனியாக பூஜை, புனஸ்காரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் கெட்ட கர்மாக்களை அதிகமாக கொண்டுள்ளவர்கள் பூஜை செய்யும் பொழுது தான் தோஷங்கள் நீங்குகின்றன. இரண்டிற்கும் இதுதான் வேறுபாடு.

pichai-thanam

ஒருவர் பசி என்று வரும் பொழுது அவரை எந்த சூழ்நிலையிலும் இல்லை என்று கூறி அனுப்பி இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் செய்திருந்தால் நிச்சயம் அங்கு செல்வ வளமானது தடைபடும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்காக தான் நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் திண்ணை வைத்து முன்பின் தெரியாதவர்களுக்கு கூட அடைக்கலம் கொடுத்து வந்தனர். இப்பொழுது ரத்த உறவுகளுக்கு ஒரு வாய் சாப்பாடு போட கூட முகம் சுளிக்கின்றனர். பிறகு எப்படி இவரிடம் செல்வம் நிலைக்கும்?

செல்வவளம் தடைபடுவதற்கு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு செய்யாமலிருப்பது. குலதெய்வத்தை மறந்தவர்களுக்கு செல்வவளம் கட்டாயம் குறைய ஆரம்பிக்கும். எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் ஏற்படுகிறது என்றால் குலதெய்வ குறை இருக்கிறது என்று அர்த்தமாகும். உங்களுக்கு குலதெய்வம் தெரியாவிட்டாலும் அதனை உங்களுடைய பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் இருக்கும் கஷ்ட நிலை மாறி நல்ல ஒரு முன்னேற்றமான சூழ்நிலை பிறக்கும்.

tharpanam1

இறுதியாக பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும். எந்த ஒரு வீட்டில் பித்ரு கடமை செய்யவில்லையோ! அந்த வீட்டில் வறுமை தாண்டவமாடும். அமாவாசை தோறும் எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அது மலை போல் இருந்தாலும், பனி போல் விலகிவிடும். ஆனால் பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் செல்வவளம் மட்டும் அவர்களிடம் பெருகவே செய்யாது. ஆக இந்த 4 தவறுகளை திருத்திக் கொண்டால் நிச்சயம் உங்களிடமும் செல்வம் தானாகவே சேரும் என்பது சாஸ்திர நம்பிக்கை.