இந்த 2 பொருளை சேர்த்து வைத்தாலே வீட்டில் செல்வம் மென்மேலும் கொட்டிக் கொண்டே இருக்கும் தெரியுமா?

elakkai-vilakku-kuberan

வீட்டில் செல்வ வளம் செழிக்க முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல் இந்த கிழமைகளில் எல்லாம் வீட்டை சுத்தம் செய்யவும் கூடாது என்கிற சாஸ்திர நியதி உண்டு. சுத்தமான இடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது அனைவருக்கும் தெரியும். அசுத்தமான இடங்களில் மூதேவி மற்றும் சனி பகவான் வாசம் செய்வார். வீட்டை சுத்தம் செய்து சனியையும், மூதேவியும் விரட்டி விட்டால் மகாலட்சுமி தானாகவே வந்து சேர்ந்து விடுவாள். வீட்டில் செல்வ மழை பொழிய எளிதாக நாம் செய்யக் கூடிய விஷயம் தான் இது! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ottadai

வீட்டில் செல்வ மழை பொழிய வீட்டில் இருக்கும் ஒட்டைகளை அடிக்கடி நீக்கி விட வேண்டும். எந்த அளவிற்கு உங்கள் வீட்டில் ஒட்டடைகள் இருக்கிறதோ! அந்த அளவிற்கு வறுமையும் நிச்சயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வீட்டின் மூலை முடுக்குகளில் கூட ஒட்டடையை சேர விடக்கூடாது. அது போல் வீட்டை எப்போதும் வாசமாக வைத்திருக்க வேண்டும். துர்நாற்றம் வீசும் இடங்களிலும், அசுத்தம் நிறைந்த இடங்களிலும் கட்டாயம் மூதேவி வீற்றிருப்பாள். மூதேவி இருக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும். தொடர் தோல்விகள், வீண் விரயங்கள், பகைவர்கள் தொல்லை, வருமான இழப்பு அனைத்தும் ஏற்படும். நாம் எப்படி வீட்டை வைத்துக் கொண்டால் நம் வீட்டிலும் செல்வ மழை பொழியும்? என இனி வரும் பத்திகளில் படிப்போம்.

முதலில் வீட்டின் நுழைவு வாயிலில் திருஷ்டிகள் நீங்க கண் திருஷ்டி கணபதியின் படத்தை மாட்டி வைக்கவும். வாரம் ஒரு முறை எலுமிச்சை பழத்தை பச்சை மிளகாயுடன் சேர்த்து கட்டி விடுங்கள். வீட்டு தலைவாசலில் இரண்டு புறமும் மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருப்பது குபேர சம்பத்து கொடுக்கும். தோரணம் போல் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரிஜினல் பூவாக இருந்தாலும் சரி, விற்பனைக்கு இருக்கும் பிளாஸ்டிக் பூக்களாக இருந்தாலும் சரி, மஞ்சள் நிறத்தில் நிலைவாசலை மலர்களால் அலங்காரம் செய்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

kubera deepam

மேலும் வாரம் ஒரு முறை கட்டாயம் நிலை வாசலில் தீபம் ஏற்றுங்கள். பூஜை அறையில் நீங்கள் வடக்கு நோக்கி குபேர தீபம் அல்லது அகல் தீபம் ஏற்றி வழிபட சகல செல்வங்களும் சேரும். அதில் நீங்கள் ஊற்றும் நெய்யுடன் இந்த இரண்டு பொருட்களை கலந்து தீபம் ஏற்றுங்கள். வீட்டில் எப்பொழுதும் பச்சை கற்பூரம் இருப்பது செல்வ செழிப்பு அதிகரிக்க செய்யும்.

குபேர தீபம் ஏற்றும் பொழுது அதில் பச்சை கற்பூரத்தை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காய் விதைகளை ஒன்றிரண்டு சேர்த்து தீபம் ஏற்றினால் நிச்சயம் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. வியாழன் கிழமைகளில் இவ்வாறு செய்ய குபேரனுடைய அருள் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு செய்ய மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கிழமைகளிலும், ஒவ்வொருவருடைய அருள் கிடைக்கப் பெற்றால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

Elakkai

மேலும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்கவும். அன்றைய நாளில் ஒட்டடை அடிப்பது, விளக்கு வைத்த பிறகு குப்பைகளை கூட்டுவது அல்லது வெளியில் கொட்டுவது போன்ற செயல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டை இப்படி பாதுகாத்து வந்தால் தரித்திர நிலை நீங்கி செல்வ நிலை உயரும்.