10 பைசா செலவே இல்லாம இந்த 3 பேருக்கு, இந்த தானங்களை, தினமும் செய்து வருவது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா? இதுகூட தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

rice-crow-thanam
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ் நாளில் இத்தனை தானங்களைச் செய்து இருக்க வேண்டும் என்கிற கணக்கு உண்டு. அதில் இரண்டாவதாக வாயில்லா ஜீவராசிகளுக்கு தினமும் உணவளிப்பது புண்ணியத்தை சேர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் என்றால் பெரிதாக செலவு செய்து செய்ய வேண்டிய ஒரு விஷயம் அல்ல, எளிதாக செலவே இல்லாத இந்த 3 தானங்களை தினமும் செய்து வருவதன் மூலம் அளப்பரிய நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது ஆன்மிகம்! அப்படியான 3 தானங்கள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

annathanam

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவார்கள். பசியில் வாடும் ஒருவருக்கு ஒருவேளை நீங்கள் அன்னதானம் செய்தால் கூட உங்களுக்கு அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் சொல்லில் அடங்காதவை. ஆனால் தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும், தானம் செய்தால் நல்லது நடக்கும் என்று உங்கள் காரியத்திற்காக நீங்கள் தானத்தை செய்யக்கூடாது. இன்றைய நாள் நம்மால் ஒருவரின் பசி தீர்ந்து இருக்கிறது என்கிற மனநிறைவிற்காக நீங்கள் தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பச்சரிசியில் கோலம் போடுவது எறும்புகள் சாப்பிடும் என்பதால் தான் நம் முன்னோர்கள் பச்சரிசி கோலம் போட சொல்லி இருக்கின்றனர். பச்சரிசியில் கோலம் போட முடியாவிட்டாலும் கொஞ்சம் அரிசி மாவில் சர்க்கரை கலந்து அல்லது வெறும் சர்க்கரையை மட்டுமாவது வாசலில் ஓரமாக ஒரு இடத்தில் தூவி விடலாம்.

ant-erumbu

இதனை சாப்பிட வரும் எறும்புகள் மூலமாக நமக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்கும், ஏழு ஜென்ம பாவங்கள், சாபங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இனி பச்சரிசியில் கோலம் போடுங்கள் அல்லது கோலம் போட முடியவில்லை என்றால் கோலம் போடுவதற்கு முன்னர் கொஞ்சம் அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து எறும்புக்கு தீனி போடுங்கள், பிறகு கோலம் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

அதே போல பித்ருக்கள் சாபம் நீங்கவும், முன்னோர்கள் ஆசி கிடைக்கவும் காகத்திற்கு உணவு படைக்க வேண்டும் என்கிற நியதியும் உண்டு. அதுவும் நீங்கள் மதியம் சமைத்த முதல் உணவை காகத்திற்கு தினமும் படைத்து வந்தால் சகல கஷ்டங்களும் நீங்கும். சமைத்து முடித்தவுடன் ஒருகைப்பிடி சூடான சாத பருக்கைகளுடன், கொஞ்சம் குழம்பை நீங்கள் என்ன சமைத்து இருக்கிறீர்களோ அதை ஊற்றி பிசைந்து ஒரு கைப்பிடி அளவிற்கு காகத்திற்கு வைத்துவிட்டு பின்னர் நீங்கள் சாப்பிடப் பழகினால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் பாதி குறைய ஆரம்பிப்பதை நீங்களே உணரலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த தானத்தை தினமும் செய்ய தவறாதீர்கள்.

crow

அதே போல இரவு நேரத்தில் சாதத்தை வழித்து காலி பண்ணி விடக்கூடாது. நீங்கள் ஒரு கைப்பிடி சாதத்தையாவது மீதி இருக்குமாறு சமைக்க வேண்டும். அந்த மீதி இருக்கும் சாதத்தை ஒரு கைப்பிடி அளவிற்காவது நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு வைக்க வேண்டும். நாய் பைரவர் உடைய அம்சமாக விளங்குகிறது எனவே நாய்களுக்கு இரவில் உணவு வைத்து வந்தால் பைரவர் அருள் கிடைக்கும். இப்படி காலையில் எறும்பிற்கும், மதியத்தில் காகத்திற்கும், இரவில் நாய்களுக்கும் உணவு தானம் செய்து வர நம்முடைய எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விடுவதாக நம்பப்படுகிறது.

- Advertisement -